நேதாஜியின் நகர கமிஷனர் பொறுப்பு Netaji's city commissioner is in charge | Biography of Netaji நேதாஜியின் வாழ்க்கை வரலாறு - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, October 3, 2020

நேதாஜியின் நகர கமிஷனர் பொறுப்பு Netaji's city commissioner is in charge | Biography of Netaji நேதாஜியின் வாழ்க்கை வரலாறு

நேதாஜியின் நகர கமிஷனர் பொறுப்பு  Netaji's City Commissioner is in charge | Biography of Netaji நேதாஜியின் வாழ்க்கை வரலாறு


நகர கமிஷனர் பொறுப்பு 

கொல்கத்தா நகராட்சிக்கு நடந்த தேர்தலில் சித்தரஞ்சன் தாஸ் வெற்றி பெற்றார். கொல்கத்தா நகர தந்தையாக பொறுப்பேற்றதும் தான் நடத்திவந்த "பங்களா சுதா"  "பார்வர்டு" பத்திரிகைகளை நடத்தும் பொறுப்பினை நேதாஜியிடம் ஒப்படைத்தார். அத்துடன் கொல்கத்தா நகரில் கமிஷனர் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைத்தார். 

பொறுப்பினை ஏற்ற நேதாஜி முதலில் நகராட்சியை நடைமுறையிலிருந்த குறைபாடுகளை களைந்து அதனை ஒழுங்குபடுத்தினார்.  நகர சுகாதாரம் கல்வி முறை திருத்தி அமைத்தார். நகராட்சி ஊழியர்கள் அனைவரையும் கதராடையினை உடுத்திடச் செய்தார். 

தெருக்களுக்கு நம் நாட்டு பெயர்களை வைத்தார். ஆங்கிலேய பெயர்களை தவிர்த்தார்.  நம் நாட்டு தலைவர்களை வரவேற்பளித்திடச் செய்தார். நேதாஜியின் பல்வேறு சீர்திருத்தங்களினால் கழகத்தின் நோக்கமும் நடைமுறைகளும் முற்றிலும் மாறின. நேதாஜியின் துணிவும் தொண்டும் மக்கள் மனதைக் கவர்ந்தன. அவரது சிறப்பும் செல்வாக்கும் ஒவ்வொரு நாளும் வளர்ந்தோங்கியது. 

அவசர சட்டம் 

நேதாஜி கொண்டுவந்த நகராட்சியின் நடைமுறைகளை கண்டு ஆங்கிலேய அரசுக்கு அச்சத்தை உண்டாக்கியது.  1924 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் நாள் நள்ளிரவில் அரசு பிரதிநிதிகள் அவசர சட்டம் ஒன்றை வெளியிட்டார். அந்த சட்டத்தின் மூலம் எவரையும் விசாரிக்காமலேயே சிறையில் அடைக்க உரிமை வங்காள அரசுக்கு வழங்கப்பட்டது. 

சட்டத்தின் வாயிலாக நேதாஜி முதலில் பதவியிலிருந்து விலகி அவரை சிறையில் அடைக்க கருதினர். அக்டோபர் 25-ம் நாளில் அதிகாலை நேரத்தில் உறங்கிக்கொண்டிருந்த நேதாஜியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறையிலிருந்தே 

நேதாஜி கைது செய்யப்பட்டதால் அவர் வகித்த பொறுப்புகளை எளிமையாக நிர்வகிக்க ஒருவரும் கிடைக்காமல் ஆங்கில அரசு தவிர்த்தது.  மாநகர கோப்புகள் மலைபோல் குவிந்தன. நகராட்சி பணிகள் முடங்கின.  அதனால திகார் சிறையில் இருந்தபடியே மக்கள் நலன் கருதி நகராட்சி நிர்வாகத்தை கவனித்தார் நேதாஜி.

ஆங்கில அரசுக்கு இது பெருத்த அவமானமாக அமைந்தது. அதன் மூலம் நேதாஜியின் பெருமை உயர்ந்தது. மகனின் தியாகத்தையும் ஆற்றலையும் கண்டு நேதாஜியின் பெற்றோர் மகிழ்ந்தனர். பெருமை கொண்டனர் 

ஒன்றிணைந்தனர் 

நேதாஜி கைது செய்யப்பட்டதன் விளைவாக பிரிந்து நின்ற காங்கிரசாரும் சுயராஜ்ய கட்சி யினரும் ஒன்றிணைந்தனர்.  இச்செய்தி அறிந்த நேதாஜி அளவில்லா மகிழ்ச்சி அடைந்தார். 

நாடு கடத்தல் 

இந்திய மக்களின் போராட்டம் வலுப்பெற்று வருவதை கண்ட ஆங்கில அரசு அதைத் தகர்க்க முடிவு செய்தது.  நேதாஜியை இந்தியாவில் இருந்து நாடு கடத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது. எனவே நேதாஜி பர்மாவில் மாண்டலே சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர். 

காசநோய் 

மாண்டலே பகுதி வெப்பம் நிறைந்ததாகும். அங்குள்ள சிறை மிகவும் சீர்கேடான தேசமும் சீர்கெடும் நேதாஜி உடலை உருக செய்ததோடு ஒத்துக்கொள்ளாத உணவு அவரது உடலினை நலிவடை செய்து  உடலை வருத்தியது. 

இந்நிலையில் நேதாஜியின் குருவாக விளங்கி வந்த தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் உடல் நோய் கண்டு 1925 ஆம் ஆண்டு ஜூன் 16-ஆம் தேதி மரணமடைந்தார் என்ற செய்தி நேதாஜியை இடி போல வந்து தாக்கியது. உடல் நோயோடு உள்ள நோயும் ஒன்றாகவே சில நாட்களில் அவருக்கு இருமல் முற்றி காச நோயாக மாறியது. அவரது உடல்நிலை பற்றி லண்டன் பார்லிமெண்டில் கேள்விகள் எழுந்தன. வங்க அரசு அதனை கண்டுகொள்ளவில்லை. 

சட்டமன்ற தேர்தல்கள் 

இந்த நிலையில் இந்தியாவின் சட்ட மன்றங்களுக்கு பொதுத் தேர்தல் நடைபெறவிருந்தது.  சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் சிறையிலிருந்த நேதாஜியின் பெயரினை மக்கள் சிபாரிசு செய்தனர்.

நேதாஜி தேர்தெடுக்கப்பட்டார் 

சட்டமன்றத்தில் தேர்தல் முடிவுக்குப் பின்பும் நேதாஜியை ஆங்கிலேய அரசு விடுதலை செய்யவில்லை.  அதனால் மக்கள் கொதித்து எழுந்தனர். நாடு முழுவதும் கிளர்ச்சி எழுந்தது. சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கிளர்ச்சி வளர்த்தது. 

அதனை தடுக்க நேதாஜியின் உடல் நிலையை ஆராய மருத்துவ குழு ஒன்றினை "மாண்டேலா" சிறைக்கு அனுப்பியது.  அக்குழுவில் நேதாஜியின் சகோதரர் சசுனில் சுந்தரும் இருந்தார். 

வேறிடத்தில் சிகிச்சை 

மருத்துவ குழுவினர் அவரது உடல் நிலையை ஆராய்ந்து கடும் காச நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் உடனே அவரை உடல் நலத்திற்கு உகந்த வேறு இடத்திற்கு அனுப்பி சிகிச்சை செய்ய வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்தனர். 

நிபந்தனையின்றி விடுதலை 

1927 ஆம் ஆண்டு மே மாதம் 15-ம் நாளில் "அரோண்டா"  என்னும் கப்பலில் நேதாஜி கொல்கத்தா துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். மக்கள் ஆரவாரம் செய்தனர். மறுநாள் நேதாஜியை நிபந்தனையின்றி விடுதலை செய்தனர். அந்த செய்தி அறிந்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார் சரத்சந்திரர். ஆறுமாதங்களில் அவர் உடல் நலம் நன்கு தேறினார். அதன்பின்பு அவர் முன்பு போலவே அரசியலில் ஈடுபாடு காட்டினார். 

காந்தியடிகளிடம் விடை

 உடல் நலம் தேறிய நேதாஜி சபர்மதி ஆசிரமத்தில் சென்று காந்தியடிகளை சந்தித்தார். மீண்டும் தீவிரமாக விடுதலைப் போரில் இறங்க வேண்டும் என்று காந்தியடிகள் கேட்டுக்கொண்டார். காந்தியடிகளோ மெல்ல மெல்ல நிதானமாக படிப்படியாகத்தான் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றார். காந்தியடிகள் போராட்ட முறையையும் நேதாஜியின் போராட்ட முறையை வேறுபடுத்தின. அதனால் காந்தியடிகளிடம் விடைபெற்றுக்கொண்டு கொல்கத்தாவிற்கு திரும்பினார் நேதாஜி.

நேதாஜியின் நகர கமிஷனர் பொறுப்பு  Netaji's city commissioner is in charge | Biography of Netaji  நேதாஜியின் வாழ்க்கை வரலாறு

No comments:

Post a Comment