நேதாஜியின் கல்லூரி வாழ்க்கை Netaji's college career | நேதாஜியின் வாழக்கை வரலாறு Biography of Netaji - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, October 1, 2020

நேதாஜியின் கல்லூரி வாழ்க்கை Netaji's college career | நேதாஜியின் வாழக்கை வரலாறு Biography of Netaji

மாணவரணி தலைவரான நேதாஜியின் கல்லூரி வாழ்க்கை Netaji's college career as a student leader | நேதாஜியின் வாழக்கை வரலாறு Biography of Netaji


கண்ணீரும் அரவணைப்போம் 

இதற்கிடையில் தனது மகனைக் காணாது பெற்றோர்கள் மிகுந்த கவலையையும் துயரத்திலும் ஆழ்ந்திருந்தனர். இனி அவனை மீண்டும் காண்பது இந்த ஜென்மத்தில் இல்லை என்று அவர்கள் நம்பிக்கை இழந்தனர் 

ஆறு மாதங்களுக்கு பின்பு ஒரு நாள் அவர்கள் அனைவரும் வீட்டின் முன் அறையில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கும் வேளையில் நேதாஜி அங்கே திடீரென்று தோன்றினார். கண்ணீர் வடித்த வண்ணம் இருந்த தாயிடம் சென்று அவரது கால்களில் விழுந்து வணங்கினார். சரியான உணவும் உறக்கமும் இன்றி நேதாஜி சுற்றித் திரிந்ததால் வெயில் மழை பனி போன்றவற்றில் பாதிக்கப்பட்டு பித்த வாத நோயினால் பீடிக்கப்பட்டு  உடல் மெலிந்து காணப்பட்ட மகனைப் பார்த்து கவலை கொண்ட தாய் சுபாஷ் உனக்கு என்ன ஆச்சு ஏன்?  இந்த கோலத்துக்கு ஆளானாய்?  எங்கே பிரிந்து போய் இருந்த?  என்ற கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு கதறி அழுது அவரை கட்டித்தழுவி கண்ணீர் வடித்தார், அவரது தந்தையும் அவரை அன்புடன் அணைத்து கண்ணீர் சொரிந்தார்.

எதிர்கால நினைவு 

நேதாஜியின் உடல் நிலையை கண்டு கவலை கொண்ட பெற்றோர்கள் தக்க டாக்டரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். ஒரு சில வாரங்களில் உடல் நலம் பெற்றார். குருவை தேடி அலைந்த ஏமாற்றமடைந்த நேதாஜி தம் எதிர் காலத்தைப் பற்றி நினைக்கலானார. 

மீண்டும் மாணவர் தலைவர் 

நேதாஜி தனது ஆற்றலாலும் அறிவு நுட்பத்தாலும் சுயசிந்தனை ஆற்றலும் மற்றவர்களை எளிதில் கவர அதன் பேரில் அவர் மாணவர் தலைவர் ஆனார். ஆசிரியரின் இழிவான பேச்சு கல்லூரியில் பணிபுரிந்து வந்த சரித்திரப் பேராசிரியர் F C  ஓட்டன் என்னும் ஆங்கிலேயர் ஒருவர் ஒரு நாள் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது இந்தியர்களைப் பற்றி இழிவாகப் பேசினார். 

மாணவனை அடித்தார் 

மாணவர் தலைவரான நேதாஜி ஆசிரியரின் பேச்சினைக் கண்டு ஆத்திரம் அடைந்தார். முதற்கட்ட நடவடிக்கையாக ஆசிரியரின் செயலுக்கு எதிர்ப்பை காட்டும் பொருட்டு மாணவர்களை வகுப்பறை புறக்கணிக்கும்படி கேட்டுக் கொண்டார். அதன் பேரில் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனர். அதைக் கண்ட அந்த ஆங்கிலப் பேராசிரியர் கோபம் கொண்டு ஒரு இந்திய மாணவனை காரணமின்றி அடிக்கவும் செய்தார். 

ஏற்கனவே அந்த ஆசிரியர் மீது கோபம் கொண்டிருந்த மாணவர்கள் ஆசிரியரை சுற்றி வளைத்து அடிக்கவும் முற்பட்டனர். அதனை நேதாஜி தடுத்து நிறுத்தினார். 

மன்னிப்பு கேட்டார்

மாணவரை பேராசிரியர் அடித்த செய்தி மற்ற கல்லூரிகளுக்கும் பரவவே, எல்லா கல்லூரி மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு ஒன்று சேர்ந்தனர். பேராசிரியர் மன்னிப்பு கேட்கும்வரை போராட்டம் என்று அறிவித்தனர். அத்தோடு நில்லாமல் கல்லூரி முதல்வரிடம் சென்று வலியுறுத்தவும் செய்தனர். வேறு வழியின்றி முதல்வரின் வேண்டுகோளின்படி சம்பந்தப்பட்ட பேராசிரியர் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டார். 

கல்லூரியில் இருந்து நீக்கம்

தம்மை மன்னிப்பு கேட்குமாறு செய்த நேதாஜியின் மீது ஆத்திரம் கொண்ட பேராசிரியர் ஓட்டன் தனது ஆத்திரத்தை தீர்த்துக் தக்க சமயத்தை எதிர்நோக்கி கொண்டிருந்தார். ஒரு நாள் நேதாஜி செய்யாத குற்றத்தை செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தி அடங்காப்பிடாரி என்ற பட்டம் சூட்டி கல்லூரி முதல்வரிடம் கூறி தற்காலிக நீக்கம் செய்ய அனுமதி பெற்றார். அதன் அடிப்படையில் இரண்டு ஆண்டுகள் கல்லூரியிலிருந்து விளக்கவும் செய்தனர். அதோடு இரண்டு ஆண்டுகள் வரை அவர் வேறு எந்த கல்லூரியிலும் சேர முடியாதவாறு தடையும் விதித்தனர்.

மன்னிப்பு வேண்டி 

நேதாஜி தான் செய்தது தவறு என்று கல்லூரி முதல்வரிடம் மன்னிப்பு கேட்டு இருந்ததால் அவர் அந்த கல்லூரியில் தொடர்ந்து படித்து இருக்கலாம். ஆனால் மானத்தை பெரிதாக பேணி வந்தவர் மானத்தை இழந்து மன்னிப்பு வேண்டும் என்று மறுத்துவிட்டார். 

கவலை அதிகரித்தது. 

இரண்டு ஆண்டுகள் கடந்தன. நேதாஜி எவ்வாறேனும் இடையில் தடைபட்ட கல்லூரிப் படிப்பை தொடர்ந்து முடிக்க வேண்டும் என்று விரும்பினார். குற்றம் சுமத்தப்பட்டு வெளியேற்றப்பட்டனர் என்பதால் எந்த கல்லூரியும் அவரை ஏற்றுக் கொள்ள சம்மதிக்க வில்லை. அதனால் அவருக்கு கல்வி பற்றிய கவலை அதிகரித்தது.

சேர்வதற்கான உத்தரவு 

அந்த நிலையில் செல்வமும் செல்வாக்கும் மிக்க அசிடோஸ் முகர்ஜி என்பவரின் பெரும் முயற்சியினால் அந்த பல்கலைக்கழகத்தில் நேதாஜி சேர்வதற்கான உத்தரவைப் பெற்று தந்தார். அதன் காரணமாக 1917 ஆம் ஆண்டில் "ஸ்காட்ஷ் சர்ச்" கல்லூரியில் சேர்ந்து தன் படிப்பைத் தொடர்ந்தார். படிக்கும்போதே தேசிய பாதுகாப்பு படைகயிலும் சேர்ந்து போர்ப் பயிற்சியும் பெற்றார்.

No comments:

Post a Comment