நேதாஜியின் மகளீர் படை Netaji's Women's Force | நேதாஜியின் இறுதி வாழ்க்கை Netaji's final life | நேதாஜியின் வாழ்க்கை வரலாறு Biography of Netaji
நேதாஜியின் வருகை
இச்செய்திகள் யாவும் பெருநாளில் இருந்த நேதாஜிக்கு தெரியப்படுத்தப்பட்டது. ராஜ் பிகாரி கோஷும் ஜப்பான் அரசின் உதவியுடன் நேதாஜியை அழைத்து வர முயற்சித்தார். அதன்படி 1943 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜெர்மனியில் இருந்து நீர் மூழ்கிக் கப்பலின் மூலம் மூன்று மாதங்கள் கடந்து வந்து சுமத்திரா தீவு வந்து சேர்ந்தது.
வரவேற்பு
சுமத்திரா தீவில் இருந்து டோக்கியா நகருக்கு சென்றார். இவ்விசயம் தெரிந்த இந்திய மக்கள் அவரை மகிழ்வுடன் வரவேற்றனர். ஜப்பான் அரசாங்கம் தம்பங்களுக்கு சிறந்த முறையில் வரவேற்பளித்து.
நேதாஜியின் அறிக்கை
நேதாஜி டோக்கியோவை அடைந்ததும் இந்தியா விடுதலை பெறுவதற்கு உரிய வாய்ப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் இந்தியப் படை வலிமை கொண்டு அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். அந்த அறிக்கை டோ்க்கியோ வானொலி நிலையத்தில் பல மொழிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
சிங்கப்பூர் செல்லல்
டோக்கியோவில் இருந்து சிங்கப்பூர் சென்றனர். அங்கு நடைபெற்ற இந்திய தலைவர்கள் மாநாட்டில் இந்திய விடுதலை கழகத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் நேதாஜி. நேதாஜி தலைமை ஏற்றபின் ஜப்பானிய அரசு இந்திய விடுதலை கழகத்தை மதித்த்து ஆதரித்தது, அன்று முதல் கீழை நாடுகள் அனைத்திலும் படை திரட்டும் முயற்சியில் இறங்கினார். பல்லாயிரக்கணக்கான போர்க்கைதிகள் அடிப் படையில் சேர்ந்தனர்.
மாநாட்டு பந்தலில் சுதந்திரக் கொடி
1943 ஆம் ஆண்டு அக்டோபர் 21ம் நாள் அன்று நேதாஜி தலைமையில் மாநாடு ஒன்று நடைபெற்றது. அம்மா நாடு சுதந்திர இந்திய அரசின் கால்கோள் விழாவாக அமைந்தது. மாநாட்டு பந்தலின் முன் இந்திய சுதந்திர கொடி பறக்கவிடப்பட்டது. சுதந்திர அரசின் தலைவராக நேதாஜி தேசிய பிரமாணம் எடுத்துக் கொண்டார் தமக்கு உதவியாக அமைச்சர் குழு ஒன்றினை அமைத்துக் கொண்டார். நேதாஜியின் சுதந்திர இந்திய அரசை ஜப்பான் அரசு ஏற்றுக்கொண்டது. மகளிர் ராணுவ பயிற்சி பெறுவதற்காக ராணுவ தளம் ஒன்றினை அமைத்து அதில் பயிற்சி பெற்ற மகளிர் கொண்டு ஜான்சிராணி படை ஒன்று நியமிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் இராணுவ உடை தரித்து பயிற்சியினை மேற்கொண்டனர். கேப்டன் லட்சுமி படைக்குத் தலைமை ஏற்றார்.
சிங்கப்பூர் வானொலியில்
1943 ஆம் ஆண்டு அக்டோபர் 23ம் நாள் நள்ளிரவில் பிரிட்டன் மீதும் அது அதன்படி அமெரிக்கா மீதும் சுதந்திர இந்திய அரசு போர் தொடங்க முடிவு செய்திருப்பதாக சிங்கப்பூர் வானொலியில் இருந்து பிற நாடுகளுக்கு நேதாஜி அறிவிப்பை விடுத்தார்.
தீவுகளுக்கு புதுப்பெயர்
சுதந்திர இந்திய அரசுக்கு ஒரு நாடு இல்லாமல் இருந்தது. ஜப்பான் அரசு வசம் இருந்த அந்தமான் நிக்கோபர் தீவுகளை சுதந்திர இந்திய அரசுக்கு வழங்கியது. அந்தமானுக்கு தியாகிகள் தீவு என்னும் நிக்கோபார் "சுயராஜ்ஜியத் தீவு" என்றும் புது பெயர்கள் இடப்பட்டன.
போர் துவங்கியது
1944 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் நாள் என்று போர் தொடங்கியது. இந்திய தேசிய படை ஜப்பானிய படையின் உதவியுடன் இந்தியா மீது போர் தொடுத்து ஆங்கிலப் படைகளை அழித்து முன்னேறியது. அசாம் பகுதிக்குள் சென்றது. விடுவிக்கப்பட்ட இடங்களுக்கு எஸ் சி சட்ஜிடர் கவர்னராக நியமிக்கப்பட்டார். இம்பால் பகுதியினையும் வளைத்தது.
இருப்பினும் இரண்டு மாதம் முற்றுகை நீடித்ததால் எதிரிப்படை சரணடைய இருக்கும் நிலையில் அசாம் மற்றும்மா பர்பகுதிகளில் எதிர்பாராத அளவில் பெரும் மழை பெய்ய தொடங்கியதால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. அதனால் இந்தியப் படைக்கு உணவுப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் ஜப்பான் மீது அமெரிக்கா விமானங்கள் தொடர்ந்து குண்டுகளை வீசி அடித்ததினால் அங்கிருக்கும் பொருளுதவி வந்து சேரவில்லை.
இந்நிலைதனை அறிந்த நேதாஜி தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு தேசிய படைக்கு கட்டளையிட்டார். இங்கிலாந்து படை வீரர்கள் ரங்கூனை நெருங்கி விட்டனர். அதனை அறிந்த நேதாஜி ரங்கூனில் இருந்து நடந்தே 300 மைல் தூரம் சென்று பாங்காக்கை அடைந்தார்.
ஜப்பான் சரணடைந்தது
ஜப்பானில் அமெரிக்க படைகள் நாகசாகி ஹிரோஷிமா நகரங்களில் அணுகுண்டுகளை வீசி அளித்தது. அதனால் ஜப்பானும் தோல்வியுற்று அவர்களிடம் சரணடைந்தது. இதை அறிந்த நேதாஜி மனம் கலங்கினார்.
வீரவரலாறு
சிங்கப்பூரில் இருந்த ஜப்பான் அரசனைக் கண்டு பேசுவதற்காக 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாளன்று விமானத்தின் மூலம் புறப்பட்டு சென்றார். அவருக்கு துணையாக கர்னல் ஹபிபூர் ரஹ்மானும் சில ஜப்பானிய அதிகாரிகளும் சென்றனர். டெய்ஹோடு என்னும் விமான நிலையம் அருகில் விமானம் வீழ்ந்து நொருங்கியது. அதில் படுகாயமுற்ற நேதாஜி அன்றிரவே உயிர்நீத்த தாக டோக்கியோ வானொலி அறிவித்தது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வீர வரலாறு வாலிபர்களிடையே என்றும் நிலைத்திருக்கும்.
நேதாஜியின் மகளீர் படை Netaji's Women's Force | நேதாஜியின் இறுதி வாழ்க்கை Netaji's final life | நேதாஜியின் வாழ்க்கை வரலாறு Biography of Netaji.
No comments:
Post a Comment