சில முக்கியமான பழமொழிகளும் அதன் தமிழ் விளக்கங்களும் | Some important proverbs and its Tamil interpretations
1. செவிடன் காதில் ஊதிய சங்கு போல
குடும்பம் என்கிற போது குடும்ப அங்கத்தினர் ஒவ்வொருவருக்கும் அதில் பங்கு உண்டு. ஏனோ தானோ என்று ஒவ்வொருவரும் ஒரு விதமாக நடந்து கொண்டால் அது குடும்பமாக இருக்காது. தனிக்குடித்தனம் ஆகத்தான் இருக்கும். அதிலும் குடும்பத் தலைவருக்கு பொறுப்பு அதிகம்.
அவர்தான் தனது குடும்பத்தினரின் தேவைகளை பிரச்சனைகளை வழிகளை காதில் வாங்கிக்கொள்ள வேண்டும். அத்தோடு ஒரு காதில் வாங்கி மறு காதில் விட்டு விடாமல் தனது காதில் ஊதப்பட்ட கோரிக்கைகளை செயலாக்கம் முனைய வேண்டும். சுருக்கமாக சொல்லப்போனால் காது கேட்காத ஒருவன் காதில் சங்கு ஊதினால் அவன் எப்படி அந்த ஓசை மூலம் சலனமில்லாமல் இருப்பானொ அப்படியே இருக்கவே கூடாது.
3. சுகத்துக்கு பின் துக்கம்
2. சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும்
நமக்கு இருக்கும் நண்பர்கள் உறவினர்கள் போன்ற வர்களின் எண்ணிக்கை பெரிதல்ல. அத்தனை பேருமே நல்ல குணம் கொண்டவர்கள் தானா என்பது தான் பெரிது. ஒரு துளி விஷம் நல்ல பாலையும் நாசமாக்கி விடும் என்பதால் கெட்ட குணங்களை சொத்தாக கொண்டவர்களிடம் சேர்ந்தால் அந்த மதிப்பற்ற கூட்டத்தில் நாம் ஒருவர் ஆகிவிடுவோம். கெட்ட செயல்களும் குணங்களும் தண்டனை பெற்றே தீரும் என்பதால் சேராத இடத்திலே சேர்ந்தால் நாமும் தண்டனைக்கு உள்ளாவோம் என்பது உறுதி.
3. சுகத்துக்கு பின் துக்கம்
தூக்கத்துக்குப் பின் சுகம்
சிலருக்கு இரவு மட்டுமே பிடிக்கும். சிலருக்கு பகல் தான் பிடிக்கும். ஆனால் சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது என்று இரவோ பகலோ வராமல் போவது இல்லை. இரவும் பகலும் மாறிமாறி வந்துகொண்டே இருக்கும். இது இயற்கை. வாழ்க்கைக்கும் இது மிகவும் பொருந்தும். நம் விருப்பங்களுக்கு அப்பாற்பட்டவை சுகமும் துக்கமும். சுகம் இரவு என்றால் தூக்கம் பகல் அதனால் வாழ்க்கையில் இந்த இரண்டு கோட்பாடுகளும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். இது தெரிந்த சுகத்துக்கு மட்டுமே ஆசைப்படு நினைப்பது துக்கத்தை கண்டு முகம் சுளிப்பது என்றால் நாம் வாழத் தகுதியற்றவர்கள் என்று அர்த்தம்.
4. சூதாடி தோற்றவனுக்கு சுகம் கிடையாது
சூதாட்டம் ஆடுகிறவன் எப்போதும் குடித்தவன் போலத்தான் நிலையில்லாத மனத்துடன் இருப்பான். காரணம் அவன் தனது உயிருக்கு உயிராய் மிகவும் வெறித்தனமாக நேசிப்பது சூதாட்டத்தை. சூதாட்டம் என்றால் அவன் தனது பணம் பற்றியோ கௌரவம் பற்றிய அக்கறை படமாட்டான்.
இவ்வளவு ஏன்? அவன் சூதாட்டத்தில் தனது மனைவியை இழக்கவும் தயாராக இருப்பான். இதனால் சூதாடிகள் தனது வாழ்க்கையை பற்றிக்கூட கவலை இருக்காது. வாழ்க்கையில் அக்கறை காட்டும் போதுதான் சுகம் கிட்டும். சூதாட்டத்தையும் வாழ்க்கையாக்கிக் கொண்டவன் சுகத்தை எதிர்பார்ப்பது முள் விதைத்து நெல் எதிர்பார்ப்பது போல.
5. சொல்லுகிறது ஒன்று செய்கிறது ஒன்று
எதையாவது சொல்ல நாம் வாயைத் திறக்கும் முன்பாக யோசிக்க வேண்டும். நான் சொல்லுகிறபடி நம்மால் செய்ய முடியுமா என்று எதையாவது சொல்லிவிட்டு அதை செய்யாமல் விட்டு விடும் போது நமக்கு ஏற்படும் கெட்ட பெயரை கண்டிப்பாக நம்மால் சகித்துக்கொள்ள முடியாது. நாம் வீசிய சொல் அம்பை திரும்பப் பெற இயலாது என்பதால் அம்பை வீச வேண்டியது அவசியம்தானா என்று யோசித்து பார்க்க வேண்டும்.
ஒரு அப்பா தனது மகனுக்கு பொம்மை வாங்கித் தருவதாக இருந்தால் அதை வாங்கித் தந்துவிட வேண்டும். சொல்லிவிட்டு வாங்கித் தராமல் இருந்தால் அப்பா மீது மகனுக்கு பாசம் இல்லாமல் போய்விடும் என்பது நிச்சயம். எச்சரிக்கை.
No comments:
Post a Comment