தமிழ்ப் பழமொழிகளும் எளிமையான விளக்கங்களும் | Tamil proverbs and simple explanations - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, October 19, 2020

தமிழ்ப் பழமொழிகளும் எளிமையான விளக்கங்களும் | Tamil proverbs and simple explanations

தமிழ்ப் பழமொழிகளும் எளிமையான விளக்கங்களும்  | Tamil proverbs and simple explanations


1.தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது 

நாம் இருப்பது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு உண்மை தெய்வம் இருப்பதும்.  தெய்வம் நாம் வாழ வழி காட்டுமே தவிர வேண்டியதையெல்லாம் கொட்டாது.  காரணம்  உழைக்காதவன் வாழ்க்கையில் எதையும் பெற்றுக்கொள்ள முடியாது. உழைப்பு என்பது முதல் கடவுள் கிடையாது. உழைப்பு என்பது தெய்வம் நமக்குக் கொடுத்திருக்கும் பாக்கியம். வேலையாள் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான். நம்பிக்கையோடு செய்வதால் நிச்சயம் ஒருநாள் வெற்றி அடைய முடியும்.  

இந்த நம்பைக்கையை நாம் தளர விடக்கூடாது. நாம் கடவுளிடம் எதையாவது வேண்டினால் அவர் அதை நமக்குத் தருவார். அதற்கான சக்தியை நமக்கு கடவுள் தன்னம்பிக்கை மூலம் கொடுத்திருக்கிறார். இதனால்தான் நம்பிக்கை வாழ்க்கையின் தும்பிக்கை என்கிறோம். எனவே தெய்வம் யார் மூலமாவது நமக்கு பாதையைக் காட்டும். அந்தச் சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

3. தேய்ந்தாலும் சந்தனக்கட்டை மணம் போகாது 

பண்பானவன் ஒருவன் எவ்வளவுதான் பண கஷ்டத்தினால் இழிவான நிலைக்கு தள்ளப்பட்டாலும் அவனது பண்புகளை ஒரு போதும் இழப்பதில்லை. காரணம் அந்த உயர் பண்புகள் மட்டுமே அவன் சிறப்பு ஆஸ்தியும் கூட.  இந்த உலகில் உண்மையான நீடித்து நிலைத்து புகழ் தரக்கூடியது பணமோ அல்ல அழகோ அல்ல. மனிதனின் கெளரவம் கரைப்படாமல் காப்பாற்றுகிற குணங்கள்தான். அதனால்தான் படம் ரீதியாக ஒருவன் தேய்ந்து போனாலும் பண்பு ரீதியாக அவன் மனம் பேசிக் கொண்டே இருக்கிறான். அதனால் தான் அவனால் இவ்வுலகில் தலைநிமிர்ந்து வாழ முடிகிறது.

3. தைஈனா புல்லும் இல்லை மாசி ஈனா மரமும் இல்லை

 தை மாதத்திலும் மாசி மாதத்திலும் புல்லும் மரமும் செழித்து வளரும். இதுபோல உழைப்பும் நாணயமும் தருகிற நிச்சயமான கூலிக்கு இணையானது வேறு எதுவும் இவ்வுலகில் இல்லை.  நல்ல உழைப்பு நமக்கு செல்வத்தை ஈட்டி தரும்.  நாணயம் நம்மை உயர்த்தி விடும்.  அதனால் நாணயமான உழைப்பு பெயர் பணம் என்கிற புல்லும் மரமும் என்கிற இரட்டை பலன்களைத் தக்க காலத்தில் வழங்கி கௌரவிக்கும்.  நாணயமாக உழைக்கும் போது மனசுக்கு சுகமாக இருக்கும். அந்த நாணய உழைப்பில் பெற்ற பணத்தில் வாங்கி சாப்பிடும் போது இன்பமாக இருக்கும். ஏனென்றால் அநியாய வழிகளில் சம்பாதித்த பணம் மனசை குறுகுறுக்க வைக்கும்.

4. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் 

ஒருவன் நல்லவனாக வளர்வதும் கெட்டவனாக வளர்வதும் அவன் வளர்ச்சிக்கு வளர்க்கப்படுவதில் தான் இருக்கிறது. அவன் எப்படி வளர்க்கப் படவேண்டுமோ அப்படித்தான் அனைத்தும் கொடுக்கப்பட்டு வளர்க்கப்படவேண்டும்.  குழந்தைக்கு உலகத்தின் கஷ்ட நஷ்டங்களை விளக்கி வளர்க்க வேண்டும். அதிகம் செல்லம் கூடாது. அதிகமாக பணம் கொடுத்து வளர்த்து பழக்கப்படுத்தக்கூடாது. வாழ்க்கை என்பது கடல் என்பதை மட்டும் கூறாமல் அதில் எதிர்நீச்சல் போடவும் கற்றுக்கொடுக்க வேண்டும். 

சிறந்த பண்புகளை ஊட்டவேண்டும். அனைத்தையும் தொட்டில் காலத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ஏனென்றால் சின்ன வயசு பழக்கங்கள்தான் பசுமரத்தில் அடித்த ஆணியாகப் பதிந்து ஆயுசு வரை தொடரும்.

5. தோட்டி போல உடைத்து துரை போல சாப்பிட வேண்டும் 

8 மணி நேரம் வேலை செய்கிறேன் என்று ஒழுங்காக வேலை செய்யாமல் இடையிடையே ஓய்வு எடுத்துக் கொள்வதற்கு அல்ல பெயர் உழைப்பு.  உழைப்பு என்பது இறங்கிய காரியத்தில் முழு முழுசாக இறங்கி அதிலேயே குறியாக இருந்து அதை செய்து முடிக்கும் வரை ரேஸ் குதிரை ஓடி உழைக்க வேண்டியது உழைப்பு உடல் பலத்திற்கு மட்டுமல்ல உள்ளத்திற்கும் கூட இந்த பலம்தான் பணம் ஈட்டி தரும் பழம்.  உழைத்து சம்பாதித்து சாப்பிடுவதற்கு ஈடான சுகம் வேறு எது?

6. நகத்தாற் கிள்ளாததை கோடரி கொண்டு வெட்டினார் போல 

எதையும் தக்க நேரத்தில் செய்தால்தான் பலன் கிடைக்கும் உதாரணமாக ஒருவருக்கு உடம்பில் சிறு கட்டி தோன்ற ஆரம்பித்தால் உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அதை ஒரு ஊசி மூலம் குணப்படுத்த முயல வேண்டும் 

மாறாக அந்த கட்டி பெரிதாக ஆகிற வரையில் காலத்தைக் கனிய விட்டு அந்த கட்டியை ஆபரேஷன் மூலம் நீக்குகிற கஷ்டத்தை வைத்துக் கொள்ளக் கூடாது. இது உடல் ரீதியாக மட்டுமல்ல. உள்ளத்திற்கும் கூட ஏதேனும் கவலைகள் ஏற்பட்டால் அதை ஆரம்பமே மறுக்க முயலவேண்டும். மனசும் உடம்பும் கெட்டுப் போகிற அளவுக்கு அந்த கவலையே வளர்த்துக் கொண்டால் வாழ்க்கை முழுவதும் வம்புதான்.                               

No comments:

Post a Comment