தமிழ்ப் பழமொழிகளும் அதன் எளிமையான விளக்கங்களும் Tamil proverbs and simple explanations
1. மிதித்தாரடை கடியாத பாம்பு உண்டா?
பாம்பு பழிவாங்கும் குணம் கொண்டது. ஏனென்றால் அதை மிதித்தவர்களை அது கடிக்காமல் விடுவதில்லை. மிதித்தவன் நல்லவனா கெட்டவனா என்று பார்ப்பதும் இல்லை.
இப்படித்தான் கேடு நினைப்பவர்கள் பிறருக்கு தீங்கு விளைவிப்பது அதற்கான எதிர் விளைவை எதிர்கொள்ளாமல் இருப்பதில்லை. தீங்கு கூட ஒரு பாம்பு தான். அதை செய்பவர்களை அது கவிழ்க்காமல் இருப்பதில்லை. ஒருவனை அழிக்க முயல்பவன் பிறகு தன்னால் அழிந்து போகிறான். ஒருவன் இன்னொருவனுக்கு மோசடி செய்து பின் அவனை குழிக்குள் தள்ளுவான்.
இதனால் முன்னவன் முன்னேறி விடவா முடியும்? கண்டிப்பாக முடியாது. காரணம், செய்த மோசடிக்காக அவனது மனசாட்சி அவனை உறுத்த தொடங்கி அவனை நிம்மதி இழக்க வைக்கிறது. இதுவே ஒரு தண்டனை அல்லவா?
இத்துடன் தீங்கின் எதிர்விளைவு ஒரு சுழற்சி, ஒருவனுக்கு இன்னொருவன் தீங்கிழைத்தால் மூன்றாமவன் முன்னவனுக்கு தீங்கிழைக்க காத்திருப்பான். இது ஒரு சங்கிலித் தொடர்போல. எலியை அழிக்கக் காத்திருக்கிறது பூனை. அந்த பூனையை அளிக்கக் காத்திருக்கிறது நாய்.
ஆக, ஒருவனை அழடிக்க நினைக்கிறவன் இன்னொருவனால் அழிக்கப்பட்டு விடுவான் என்பது நடைமுறை வாழ்க்கையில் கண்கூடாக கண்டு வரும் கணக்கு.
2 மீனை மீன் விளங்கினாற் போல
மீனானது வேறு இரை தேடிக் கொள்ளலாம். ஆனால் அதற்கு தனது இனம் பற்றி கவலை இல்லை. தன் வயிறு நிரம்பினால் போதும் என்கிற மனசு அதற்கு. அதனால் மீன், மீனையே விழுங்கி தன் இச்சையை பூர்த்தி செய்து கொள்கிறது.
சில மனிதர்களின் குடும்ப வாழ்க்கையும் இந்த மீன் வாழ்க்கை ஆகத்தான் இருக்கிறது. காரணம் ஒரே குடும்பத்தில் ஒரே ரத்தத்தை சேர்ந்த உடன்பிறப்புகளுக்கு போட்டி பொறாமை சண்டை சச்சரவு எக்ஸ்ட்ரா.
ஒரு கையின் ஐந்து விரல்களும் சமநேரத்தில் இல்லை என்பதுபோல குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையாக இல்லாமல் செயலாலும் எண்ணத்தாலும் வேறுபட்டு நின்று ஒருவரை இன்னொருவர் என்று ஒருவரை ஒருவர் விழுங்க பார்க்கிறார்கள். அவர்களுக்கு குடும்ப கௌரவம் பற்றி அக்கறை இல்லை.
குடும்பத்தின் ஒரு உறுப்பினர் இன்னொரு நபரை விட கொஞ்சம் வசதியாக வாழ்ந்தால் உடனே தீயாயா எரிகிறது பொறாமை. அட நம் குடும்பத்தினன் வசதியாக பெரும் புகழோடு வாழ்கிறான். அந்தப் பெருமையில் நாமும் பங்கு கொள்ளலாம் என்று தலை நிமிர்ந்து நடக்கலாம் இல்லையா? நாமும் அது போல ஆக முயன்று குடும்பத்தை மேலும் உயர்த்தலாம் என்று எண்ணி செயல்படலாம் இல்லையா?
அப்படியில்லாமல் குடும்பத்துக்குள்ளேயே பூசலா? ஒன்று மட்டும் நிச்சயம் குடும்ப கவுரவம் காப்பாற்றப்பட வேண்டுமானால் குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் குடும்பத்தில் பிரச்சனைகள் பிறர் கண்களுக்குத் தென்படாமல் காது கேட்காமலாவது இருக்க வேண்டும்.
3. முதுகில் அடித்தால் ஆறும், வயிற்றில் அடிக்கலாமா?
இங்கு எல்லாரும் வயிற்றுப் பாட்டுக்காக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த வயிற்றுப் பாட்டுக்காக தான் சுழன்று கொண்டிருக்கிறோம். ஆனால் இதிலும் சுயநலமே உறங்கிக் கிடக்கிறது. தான் வாழ்ந்தால் போதும் பிறர் எக்கேடு கெட்டாவது போகட்டும் என்ற சுயநலம்.
சுயநலம் கூட மன்னிப்புக்கு உட்பட்டதுதான். வரம்பு மீறாமல் இருந்தால் சுயநலத்தால் அவனவன் வயிறு நிரம்ப லாம். ஆனால் இதுவே கைநீட்டி இன்னொருத்தன் வயிற்றில் அடிக்கிற மாதிரி இருக்கலாகாது.
பொதுநலம் இருந்துவிட்டால் இன்னொருத்தன் வயிற்றில் அடிக்கும் வேலையே இருக்காது. நம்மை போல தான் பிறரும் பிழைக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் எண்ணமிட்டால் அதுவே பலருக்கு அன்னம் இடுவது போல ஆகும்.
வயிற்றில் அடிப்பது என்பது எது? ஒருவனின் வாழ்க்கைக்கு வெடி வைக்கிற மாதிரி அவனை ஏமாற்றி பிழைப்பது. ஏமாந்தவன் தலையில் மிளகாய் அரைப்பது என்கிறார்களே, அதுதான் இது. ஒருவன் ஏழையாக இருப்பான். மூன்று வேளை கஞ்சிக்கே அவன்தாளம் போடுபவனாக இருப்பான்.
ஆனால் இன்னொருத்தன் பணக்காரனாக இருப்பினும் அந்த ஏழையை சுரண்டி அவனை கொள்ளையடித்து அந்த மூன்று வேளை கஞ்சியும் கிடைக்காத மாதிரி வயிற்றில் அடிப்பான். தான் பிழைக்க எப்படி வயிற்றில் அடிப்பதற்கு பின் விளைவு ஏற்படாமல் போகாதே, கீழே இருந்து மேலே எறியப்பட்ட கல் மீண்டும் கீழே விழுவது போல.
4.மூத்தோர் சொல்லும் முது நெல்லிக் காயம் முன் புளிக்கும் பின் இனிக்கும்
நாம் வாழ்ந்து கொண்டிருப்பது நிச்சயமற்ற வாழ்க்கை. இந்த அழகில் நாம் வாழ்க்கையை அனுபவித்து தெரிந்து கொள்ள முயன்றால் நம் வாழ்வின் ஏறக்குறைய அனைத்து நாட்களும் வாழ்க்கையை புரிந்து கொள்வதற்கே சரியாகிவிடும்.
அப்புறம் வாழ்ந்தென்ன பலன் சாறு இழந்த கரும்பு போல அதனால் வாழ்க்கையை சீரும் சிறப்புமாக அனுபவிக்க வேண்டுமானால் வாழ்க்கையை அனுபவித்து அனுபவம் பெற்ற மூத்தவர் சொற்களைக் கேட்க வேண்டும்.
ஆனால் பெரும்பாலானோருக்கு பெரியோர் சொற்கள் கேட்பது என்றால் விளக்கெண்ணை குடிப்பது போல கசப்பாக இருக்கும். ஏன் சே இவர்களுக்கு என்ன வேலை? சும்மா தொண தொண என்று பேசிக்கொண்டு இவர்கள் சொல்லுகிற மாதிரியே நடக்கணும் என்கிறது ஒன்று நம் தலையெழுத்து இல்லை.
நமக்கு என்று நம் வழியிருக்கு. அப்படியிருக்க இவர்கள் பேச்சை கேட்டு நாம் சந்தோஷத்தை நாம் எடுத்துக்கொள்ள வேண்டுமா? என்று முணுமுணுப்பார்கள். ஏதோ பெரியோர் சொல் கேட்டாலே குடியேறி குடியே முழுகி போகிற மாதிரி.
இந்த எண்ணம் தவறானது. அனுபவம் இல்லாததால் வருவது. மூத்தோர் சொல் கேட்டால் தள்ளாடிக் கொண்டிருக்கும் நம் குடி மூழ்கி போகாமல் மேலும் பலமான அஸ்திவாரம் ஆக கெட்டிப்பட்டுவிடும். காரணம் மூத்தோர் சொல்லின் பின்னணியில் இருப்பது வாழ்க்கையின் மேடு பள்ளங்களை அறிந்து அனுபவம்.
இந்த அனுபவத்தின் கூற்று கசப்புதான். வெளிக்கு இதை செயல்படுத்தி பார்த்தால்தானே தெரியும் இதன் இனிப்பு உள்ளுக்கு.
No comments:
Post a Comment