யோககாரன் பல்லக்கு ஏறுவான் - தமிழ்ப் பழமொழிகளும் அதன் எளிமையான விளக்கங்களும்
யோககாரன் பல்லக்கு ஏறுவான்
சீரான வாழ்க்கைக்கு அதிர்ஷ்டமும் ஒரு காரணம் என்றாலும் அதிர்ஷ்டமே வாழ்க்கை ஆகிவிடாது. யோககாரன் பல்லக்கு ஏறுவான் என்பது உண்மைதான். ஆனால் அந்தப் பல்லக்கிலேயே அவன் நிரந்தரமாக தங்கி இருக்க வேண்டுமென்றால் அதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியே ஆகவேண்டும். அதிர்ஷ்டம் கடைசி வரை நீடிக்கும் என்று நம்பாமல்.
நம் சக்தியை மீறி ஏதுவாக ஏதாவது நடந்தால் அதை அதிர்ஷ்டம் என்றோ தலையெழுத்து என்றோ நினைத்துவிடக்கூடாது. காரணம் அதிர்ஷ்டம் என்பதும் தலையெழுத்து என்பதும் நம் கையில்தான் இருக்கிறது.
முயற்சிகள் செய்யும்போது மட்டுமே அதிர்ஷ்டம் கை கோர்த்துக் கொள்ளும். லாட்டரி சீட்டில் பரிசு விழுவது அதிர்ஷ்டத்தைப் பொறுத்துத்தான். என்றாலும் அதில் லாட்டரி சீட்டு வாங்குகிற முயற்சி இருக்கத்தானே வேண்டும். வாழ்க்கை என்ன கூற விரும்புகிறது என்பதெல்லாம் இதுதான். அதிர்ஷ்டத்தை 10 சதவீதம் நம்பினால் உண்மையை உழைப்பை முயற்சியை தொண்ணூறு சதவீதம் நம்புங்கள் என்பதே.
சிறுக சிறுக சேர்த்த பணம் பெருகி அதைப் பார்க்கும் போதுதான் பெருமையும் பூரிப்பும் உண்டாகும். கொஞ்சம் கொஞ்சமாக திட மனதோடு உழைக்கும்போது முடிவில் கிடைக்கும் பலனின் போதுதான் உண்மைதான் மகிழ்ச்சியை உணர முடியும். ஏதோ சாதனையை செய்தோம். நாமாக செய்தோம் என்ற மனநிம்மதி கிடைக்கும்.
அதிர்ஷ்டம் மூலம் கிடைத்த பெயரை இப்படி அனுபவிக்க முடியும். நிச்சயமாக முடியாது, காரணம் நீ இதை உழைத்து பெறவில்லை. ஏதோ குருட்டு அதிர்ஷ்டத்தால் பெற்று விட்டாய் என்று மனசாட்சி கேலி செய்யும்.
ஆகையால் "யோககாரன் பல்லக்கு ஏறுவான்" உண்மையாயினும் யோகத்தையே வாழ்க்கை என்று எடுத்துக் கொண்டு வாழ்க்கையை பாழ்படுத்திக் கொள்ளாதீர்கள்.
No comments:
Post a Comment