ருசிகண்ட பூனை உறிக்கு உறித்தாவும் - தமிழ்ப் பழமொழிகளும் அதன் எளிய விளக்கங்களும் - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, November 5, 2020

ருசிகண்ட பூனை உறிக்கு உறித்தாவும் - தமிழ்ப் பழமொழிகளும் அதன் எளிய விளக்கங்களும்

ருசிகண்ட பூனை உறிக்கு உறித்தாவும் - தமிழ்ப் பழமொழிகளும் அதன் எளிய விளக்கங்களும்


ருசிகண்ட பூனை உறிக்கு உறித்தாவும்

ஆசைகள் இருக்கலாம் ஆனால் அதற்கும் ஒரு எல்லை இருக்க வேண்டும். எல்லை இல்லாத ஆசைகள் தொல்லையின் இருப்பிடங்கள். இருப்பதைக் கொண்டு இன்பமாக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். 

இதற்காக ஆசைப்படக் கூடாது என்று கூறவில்லை. நாம் எதற்கு ஆசைப்படுகிறோமோ அந்த ஆசை நம் சக்திக்கு உட்பட்டது தானா என்று பார்க்க வேண்டும். 

ஒரு குடிசை மட்டுமே வாங்கக் கூடிய சூழ்நிலையில் இருக்கிறோம் நாம் ஒரு பங்களா வாங்கும் ஆசையை வைத்துக் கொள்ளக் கூடாது. மாறாக ஆசையை ஒழித்து பங்களா வாங்க கூடிய முயற்சியில் இறங்க வேண்டும். ஒருவேளை நமது ஆசை பிறர் மூலமாக நிறைவேறி விட்டதாக வைத்துக் கொள்வோம். 

உதாரணமாக,  ஒரு ரேடியோ கூட வாங்க முடியாத சூழ்நிலையில் இருக்கும் நாம் ஒரு ரேடியோவுக்கு ஆசைப்படுகிறோம். நம்முடைய ஆசையை அறிந்து ஒரு நல்ல உள்ளம் படைத்தவர் ரேடியோவை வாங்கி கொடுத்து நமது ஆசையை நிறைவேற்றி வைத்து விடுகிறார். இந்த பட்சத்தில் நாம் ருசி கண்ட பூனை ஆகிவிடுகிறோம். 

நம்முடைய ஓர் ஆசை தன்னால் நிறைவேறிவிட்டதே என்று கனவுகள் மட்டுமே காணக்கூடிய ஆசைகளுக்கு எல்லாம் ஆசைப்பட ஆரம்பிக்கிறோம். அந்த ஆசைகள் நிறைவேற பிறரை எதிர்பார்க்கிறோம். முடியாத பட்சத்திலே குறுக்கு வழியையும் கையயாளத் துணிந்து விடுகிறோம். ஆசை நிறைவேற பணம் தேவை. 

அந்த பணத்தை பிறரிடம் இருந்து களவாடி நமது இச்சையை பூர்த்தி செய்து கொள்ளும் துணிச்சலில் இறங்கி விடுகிறோம். ருசி கண்ட பூனைகள் அல்லவா நாம்!  திருட்டுத்தனம் செய்யும் பூனைகளுக்கு மதிப்பில்லை. குறுக்கு வழியில் குற்றம் புரியும் மனிதர்களுக்கு கௌரவம் மரியாதை இல்லை. ஞாபகம்.

No comments:

Post a Comment