லோபிக்கு இரட்டைச் செலவு - தமிழ்ப் பழமொழிகளும் அதன் எளிமையான விளக்கங்களும் - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, November 5, 2020

லோபிக்கு இரட்டைச் செலவு - தமிழ்ப் பழமொழிகளும் அதன் எளிமையான விளக்கங்களும்

லோபிக்கு இரட்டைச் செலவு - தமிழ்ப் பழமொழிகளும் அதன் எளிமையான விளக்கங்களும்

லோபிக்கு இரட்டை செலவு 

பண விஷயத்தில் கண்ணும் கருத்துமாக கறாராக இருக்கலாம். ஆனால் கஞ்சனாக இருக்கக்கூடாது. காரணம் இருப்பதை அனுபவிக்க முடியாமல் ஒரு மன நோயை உண்டாக்கி விடும் கஞ்சத்தனம். 

ஏழையாக இருப்பவனை மதிக்கிற உலகம் லோபியாக இருந்தால் மதிப்பதில்லை என்பதோடு அவனை தூற்றவும் செய்யும். கஞ்சத்தனம் என்பது ஏறக்குறைய ஒரு நோயைப் போல.  இது இருப்பதை அனுபவிப்பதற்கு சொந்தக்காரனையும் அனுமதிக்காது.  அதை பிறர் அனுபவிக்கவும் வழிவிடாது. 

இதனால் எவருக்கும் பயன்படாத வகையில் மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் வைரமாக செல்வம் தண்டனை பெறாமல் தத்தளித்து நிற்கும் சாதாரணமானவர்களுக்கு இரட்டை செலவு என்பது கிடையாது நபிக்கு மட்டும் இரட்டை செலவு இது எப்படி

லோபி ஒவ்வொரு பைசா செலவு செய்யவும் யோசிப்பான். யோசிப்பதில் அவன் செயல்கள் முட்டாள்தனமாக இருக்கும். மனம் தடுமாறி வியர்க்க வைக்கும். எதற்காக செலவு செய்ய வேண்டும் என்று அவன் திட்டம் போடுகிறானோ அதற்காக செலவு செய்யாமல் வேறு ஒன்றுக்காக செலவு செய்கிற நிலையை எட்டி இருப்பான். 

இதனால்,  மறுபடி ஆசைப்பட்டதற்காக செலவு செய்ய வேண்டியவன் ஆகிறான். அத்துடன் அவன் தனது செல்வத்தை பயன்படுத்தாமல் பூட்டி வைப்பதிலும் நஷ்டம் அடைகிறான். செல்வம் என்பது கிணற்று நீர் போல. 

நீரை மொண்டு மொண்டு பயன்படுத்தும் போதுதான் நீர் மேலும் மேலும் சுரக்கும்.  அதுபோலவே நம்மிடம் இருக்கும் செல்வம் பிறருக்காகவும் பயன்படும் போதுதான் அது மென்மேலும் உயர்ந்து கொண்டு போகும். லோபி விஷயத்தில் இது நடக்க முடியாத சங்கதி.

No comments:

Post a Comment