வாழைப்பழத்தில் ஊசி ஏற்றியது போல் - தமிழ்ப் பழமொழிகளும் அதன் எளிய விளக்கங்களும்
வாழைப்பழத்தில் ஊசி ஏற்றியது போல்
சங்கீதத்தில் ரிதம் இருந்தால் இனிமை. வார்த்தைகளில் இதமிருந்தால் இனிமை. நினைக்கிற காரியத்தை முடித்துக் கொள்ள வேண்டுமென்றால் வார்த்தைகளில் இந்த இதம் கரை பட்டு விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கண்டிப்பும் தண்டிப்போம் கோபமும் என்று அனைத்தும் ஒரே அளவில் இருந்தால் தான் நமது மரியாதையை நாம் காப்பாற்றிக் கொண்டவர்களாகிறோம். சொந்தப் பிள்ளையை என்றாலும் அவன் ஒரு அளவுக்கு மட்டும் பெற்றோரின் உருட்டல் மிரட்டலுக்கு பயப்படுவான்.
உருட்டல் மிரட்டல் சதவீதம் ஏறிப் போனால், அப்புறம் அதற்கு மதிப்பு என்பதே இல்லாமல் போய்விடும். பிள்ளைகள் என்றாலும் அவர்கள் வளைகிற அளவுக்குத்தானே வளைவார்கள். தந்தை மகனை கடைக்கு அனுப்பி விட்டு சாமான் வாங்கி வரும்படி கூறுகிறார்.
மகன் மறுப்பை தெரிவிக்கலாம். உடனே கோபப்பட்டு, நான் சொன்னால் நீ செய்யணும் என்று தந்தை திட்டினால் முடிந்தது காரியம். "நீ சொல்லி நான் செய்ய? என்ற ரீதியில் மகன் அப்பாவுடன் மல்லுக்கு நிற்பான்.
மாறாக, தந்தை "டேய் இது உன்னால் மட்டுமே முடிகிற காரியம்" என்று மகனை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல இதமாக பாராட்டினால் காரியம் வெற்றியை சந்திக்கும் என்று சொல்ல தேவை இல்லை.
இது போன்ற சின்ன சின்ன காரியத்திற்கு என்று மட்டுமில்லை. பெரிய பெரிய காரியங்கள் வெற்றிகரமாக முடிய வேண்டும் என்றாலும் கோபம் மூக்கை நீட்டி பார் க்காமல் பார்த்துக் கொ ண்டு வார்த்தைகளில் இனிமையை சேர்க்க வேண்டும். இதம்தான் வாழ்க்கையின் வெற்றிக்கு பதம்.
வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது என்பது வார்த்தைகளில் இருக்க வேண்டும். ஆனால் அதுவே காக்காய் பிடித்தலாக மாறி விடக்கூடாது.
No comments:
Post a Comment