Tamil Nadu Government Today's News Bulletin in Tamil (12-11-2020) - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, November 12, 2020

Tamil Nadu Government Today's News Bulletin in Tamil (12-11-2020)

Tamil Nadu Government Today's News Bulletin (12-11-2020)

செய்தி வெளியீடு எண் 857                                                                                  நாள்: 12.11.2020 

செய்தி வெளியீடு

today's news,news bulletin,todays news bulletin,tamil news bulletin,11 tamil news bulletin


கொரோனோ வைரஸ் Corona Virus  நோய் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தேசிய பேரிடர் மேலாண்மை Disaster Management சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 25 - 3 - 2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.  மாண்புமிகு அம்மாவின் அரசு,  இந்த நோய்த் தொற்றில் இருந்து மக்களைக் காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி,  முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நோய் தோற்று பரவல் படிப்படியாக குறைந்து Gradually decreasing வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் நோய்தொற்று கட்டுப்பாட்டுக்குள் Within infection control கொண்டுவரப்பட்டுள்ளது. 

தற்போது பண்டிகை காலம் Festival Season என்பதால், பொதுமக்கள் பண்டிகை கொண்டாட்டத்திற்காக பல்வேறு பொருட்களை வாங்க கடை வீதிகள் மற்றும் பேருந்து நிலையங்களில் அதிகமாக கூடுகின்றனர், Gather more.   அவ்வாறு கூடும்போது முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தாது இருப்பது, ஊடகங்கள் வாயிலாகவும் கள ஆய்வுகள் மூலமாகவும் அரசின் கவனத்திற்கு தெரியவருகிறது. வெளிநாடுகளில் நோய்த் தொற்றானது இரண்டாம் அலையாக As the second wave மீண்டும் பரவும் நிலையை நாம் காண முடிகின்றது. இச் சூழ்நிலையில் நோய் தோற்று தடுப்புப் பணிகளை மேலும் தீவிரப்படுத்த To intensify வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் சமுதாய அரசியல், பொழுதுபோக்கு கலாச்சார நிகழ்வுகள் ,கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை Guidelines பின்பற்றி 100 நபர்களுக்கு மிகாமல் பங்கேற்கும் வகையில் 16 .11. 2020 முதல் நடத்த  அனுமதிக்கப் பட்ட உத்தரவு தற்போது ரத்து Cancel செய்யப்படுகிறது.  அவற்றிற்கான தடை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரையில் தொடர உத்தரவிடப்படுகிறது.

பள்ளி / கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கும் என வல்லுநர்களும் பெற்றோர்களும் தெரிவித்த கருத்தின் அடிப்படையில்,  பள்ளிகள் (9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகள் மட்டும்) அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளி கல்லூரி விடுதிகள் மற்றும் பணியாளர்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும் 16. 11. 2020 முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்பட்டது. 

இந்நிலையில், பள்ளிகள் திறப்பது சம்பந்தமாக பல ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் வாயிலாக பொது மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்ததால்,  9. 11. 2020 அன்று அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழகங்களின் கருத்து கேட்கப்பட்டது. சில பள்ளிகளில் பெற்றோர்கள் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்றும், சில பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பு கருதி தற்போதைக்கு திறக்க வேண்டியதில்லை என்றும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தனர்.  இந்த பல்வேறு கருத்துக்களையும் கல்வித்துறை ஆராய்ந்து  9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மற்றும் விடுதிகள் 16. 11. 2020 முதல் திறக்க அனுமதிக்கப்பட்ட உத்தரவு,  மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இரத்து செய்யப்படுகிறது. பள்ளிகள் திறப்பு தேதி சூழ்நிலைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும்.

அதுபோல, கல்லூரிகளை 16. 11. 2020 முதல் திறக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. இதன்படியும் 5.11.2020 அன்று வெளியிடப்பட்டுள்ள பல்கலைக்கழக மானியக்குழுவின் வழிகாட்டுதல் படியும் அனைத்து ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் முதுநிலை இறுதி ஆண்டு பயிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு மட்டும் கல்லூரி பல்கலைக் கழகங்களை 2.12.2020 முதல் திறக்க உத்தரவிடப்படுகிறது. மேலும்,  இதர வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரி திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும். 2.12.2020 அன்று  திறக்கப்படும் கல்லூரிகளில் மட்டும் மாணவர்களுக்கான விடுதிகள் திறக்கப்படும். கல்லூரிகள் மற்றும் விடுதிக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியா க வெளியிடப்படும். பிற மாணவர்களுக்கு ஏற்கனவே நடைபெற்று வரும் இணைய வழிக் கல்விமுறை தொடர்ந்து நடைபெறும். 

கொரோனா தொற்று ஏற்பட வண்ணம் முக கவசம் அணிதல்,  தனிநபர் இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைபிடிக்க பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  பொதுமக்கள் நலன் கருதி,  மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு எடுத்துவரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திருக்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

நன்றி 

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு துறை, சென்னை 9


Tag: today's news,news bulletin,today's news bulletin,tamil news bulletin,11 tamil news bulletin, 

No comments:

Post a Comment