தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடும் எனது அன்பிற்குரிய தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த "தீபாவளி" திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னை மகாலட்சுமி துணையுடன் நரகாசுரன் என்னும் கொடிய அரக்கனை திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இத்தீபத்திருநாள், அறத்தின் ஆட்சியையும், ஆணவத்தின் வீழ்ச்சியையும் குறிக்கின்ற நாளாககவும், காரிருள் மறைந்து, அறிவொளி பிறந்து, இன்பமும், இனிமையும் நிறைந்த நன்னாளாக விளங்குகிறது.
இத்தீபாவளி திருநாளில் தமிழ் நாட்டு மக்கள் அனைவரின் வாழ்விலும் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகி, நலமும், வளமும் பெற்று இன்புற்று வாழ வேண்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது மனமார்ந்த "தீபாவளி" நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment