Tamil news bulletin 19.11.2020 - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, November 20, 2020

Tamil news bulletin 19.11.2020

Tamil news bulletin 19.11.2020
tamil news bulletin,tamil news,tamil nadu news,top news tamil,tamil news live,tamil news today,tamil news channel,top 10 news tamil,breaking news in tamil,current news in tamil,news18 tamil,news18 live tamil,tamil news online,latest news in tamilnadu,tamil news live today,tamil flash news,flash news in tamilnadu today,top news tamil today,live news today,news18 tamil nadu,live tamil news,news 18 tamil nadu,live news tamil,top news tamilnadu

தமிழக அரசு 19.11.2020 அன்று வெளியிட்டச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது Download Here )
 
தமிழகத்தில் சிறு குறு தொழில் நிறுவனங்கள் பொருளாதார மேம்பாட்டிற்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.  குறிப்பாக வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு உருவாக்குதல், வளம் உருவாக்குதல் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் ஆகும். 

தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை தோராயமாக 40 9.48 லட்சம் ஆகும்.  இத்துறையில் தமிழகம் இந்திய அளவில் மூன்றாம் இடத்தில் உள்ளது.  மேலும் மாநிலம் முழுவதும் தொழில் மற்றும் சேவை துறை சார்ந்த சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் தொழில் பேட்டைகள் உருவாகியுள்ளது.  அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய போதிலும் இச்சூழ்நிலையில் எளிய நிதி சேவை மற்றும் சமூகப் பாதுகாப்பு தேவைப்படுகிறது. 

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்,  சுய உதவிக்குழுக்கள் மற்றும் மகளிர் தொழில்முனைவோர் உள்ளிட்ட அனைவருக்குமான நிதி சேவை மற்றும் போதிய சமூக பாதுகாப்பு குறித்த காணொளி கருத்தாய்வு மாண்புமிகு துணை தலைவர் திரு சி பொன்னையன்  மாநில வளர்ச்சி கொள்கை குழு அவர்களின் தலைமையில் 19 11 2020 அன்று காலை 11 மணிக்கு மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் காணொளி அரங்கம் எழிலகத்தில் நடைபெற்றது.  

இக்கூட்டத்தில் திரு அணில் மேஷ்ராம், இஆப,  உறுப்பினர் செயலர், மாநில வளர்ச்சி கொள்கை குழ  திருமதி அனு ஜார்ஜ் இஆப, ஆணையர்,  தொழில் மற்றும் வணிகம்,  துறைசார் அரசு உயர் அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  இக்கருத்தாய்வின் நோக்கம் அனைத்து வகுப்பினருக்கும் குறிப்பாக சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்கு போதிய சமூக பாதுகாப்பு மற்றும் எளிய நடைமுறை கொண்ட நிதி சேவை ஆகும்.

திரு. சி பொண்ணையன்,  மாண்புமிகு துணை தலைவர் இக்கருத்தாய்வில் பதிவு செய்த கருத்துக்கள். 

அனைவருக்குமான எளிய வங்கி சேவை  புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.  குறிப்பாக , குறைந்த வருவாய் பிரிவினர்,  நிதிசார் சார்பு பெறுவதற்கு பெரிது ஊக்கப்படுத்தும் என மாண்புமிகு துணை தலைவர் தெரிவித்தார்.  மேலும் இச்சேவை மூலம் வழங்கப்படும் கடன்கள் அவர்கள் சிறு வணிக நிறுவனம் தொடங்குவதற்கு மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு தங்களை மேம்படுத்திக்கொள்ள உதவும் என தெரிவித்தார். 

தமிழகத்தின் வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்த சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான எளிய நிதி சேவை,  புதிய தொழில்களை நிறுவுவதற்கும் சாத்தியமாக்கும் எளிய நிதி சேவையை விரிவாக்கம் தருவாயில் அதிக வேலை வாய்ப்பினை உருவாக்கிய பொருளாதாரத்தை மேம்படுத்தும். 

சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலை துறையில் சமூக பாதுகாப்பானது தொழில் முனைவோர் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பல்வேறு திட்டங்கள் மூலம் தொழில் முனைவோருக்கு கிடைக்கக்கூடிய வங்கி சேவை மற்றும் அனைவருக்குமான எளிமை மற்றும் நடைமுறை சிக்கல் அற்ற வங்கி சேவை கிடைக்க அரசு முயற்சிக்கிறது. 

கொரோனா தொற்றின் காரணமாக ஏற்பட்ட பொருளாதார சுணக்கிலிருந்து சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மீள ஏதுவாக உள்ள அரசு திட்டங்களில் குறிப்பாக,  Covid Relief and uplift scheme and Emergency Credit line guarantee Scheme   மேற்கோள் காட்டி அதன் சிறப்பம்சங்களை விளக்கினார்.  

அனைத்து பிரிவினருக்கும் சமூக பாதுகாப்பிற்கான எளிய மற்றும் நடைமுறை சிக்கலற்ற நிதி சேவையின் முக்கியத்துவம் குறித்து இக்கருத்தாய்வில் முன்வைக்கப்பட்டது. 

தனது நிறைவு உரையில் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தங்களது மேம்பட்ட சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் ஆதரவு மூலம் எளிய சேவை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதால் கூட்டு முயற்சிகள் மூலம் சமூக பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்தி,  வளர்ச்சிப் பாதைக்கு ஈட்டுச் செல்ல நிதி சேவை அவசியமாகிறது.  மேலும் எளிதில் சந்தைப்படுத்த கூடிய பொருட்களை அடையாளம் காணுதல் மற்றும் அப்பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு உரிய வழிகளுக்கான காரணிகள்,  விவசாயப் பொருட்களுக்கு மதிப்பு கூட்டல் மூலம் பொருளாதார மேம்பாடு குறித்து வலியுறுத்தினார். 

 துணைத் தலைவர்,  மாநில வளர்ச்சி கொள்கைக் குழு.

No comments:

Post a Comment