Tamil News Bulletin on 23.11.2020 நிவர்' புயல் Updates: இந்த முன்னெச்சரிக்கையெல்லாம் செய்யுங்கள்- முதல்வர் அதிரடி அறிவிப்புகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, November 24, 2020

Tamil News Bulletin on 23.11.2020 நிவர்' புயல் Updates: இந்த முன்னெச்சரிக்கையெல்லாம் செய்யுங்கள்- முதல்வர் அதிரடி அறிவிப்புகள்

நிவர்' புயல் Updates: 

இந்த முன்னெச்சரிக்கையெல்லாம் செய்யுங்கள்- முதல்வர் அதிரடி அறிவிப்புகள்

👇👇👇👇👇👇👇👇

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள்

வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள நிவர் புயல் 25 11 2020 அன்று மாமல்லபுரம் காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து உடனடியாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் எனது தலைமையில் இன்று 23 11 2020 தலைமை செயலகத்தில் நடைபெற்றது. 

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக ஏற்கனவே 18 11 2020 அன்று தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையிலும் 12 10 2020 அன்று எனது தலைமையிலும் 21 10 2010 அன்று மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் அவர்கள் தலைமையிலும் விரிவான ஆய்வு கூட்டங்கள் நடைபெற்றன. 

பேரிடர் காலங்களில் கண்காணிக்கவும்,  அறிவுரைகள் வழங்கவும்,  36 மாவட்டங்களுக்கு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டு,  மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.  மேலும்,  எனது உத்தரவின் படி கடலூர் செங்கல்பட்டு மாவட்டங்களில் வருவாய் நிர்வாக ஆணையர் நேரில் சென்று வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்கள்.

புதிதாக உருவாகியுள்ள "நிவர்"  காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி 24ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் மிக கனமழையும்,  25ஆம் தேதி மாலை பாண்டிச்சேரி அருகில் கரையை கடக்கும் போது மிக கனமழையுடன் 120 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்றாக வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இதனை எதிர் கொள்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு கீழ்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள நான் உத்தரவிட்டுள்ளேன்.

✸ வருவாய்,  உள்ளாட்சி,  தீயணைப்பு,  பொதுப்பணி,  நெடுஞ்சாலை,  நகராட்சி, மின்சார வாரியம், சுகாதாரம் மற்றும் பிற துறைகளில் சார்ந்த அலுவலர்கள் அடங்கிய மீட்புக் குழுவினர் 23 11 2020 அன்று மாலையில் இருந்து போதுமான எரிபொருள், ஜேசிபி மற்றும் லாரி மின்சார மரம் அறுக்கும் இயந்திரங்கள் மணல் மூட்டைகள் மற்றும் போதுமான மின்கம்பங்களுடன் பாதிப்பு உள்ளாகக்கூடிய பகுதிகளில் முகாம் இடவேண்டும். 

✸ புதுக்கோட்டை,  நாகப்பட்டினம்,  தஞ்சாவூர்,  திருவாரூர்,  கடலூர்,  விழுப்புரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள் முகாமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். 

✸ பாதிப்பு உள்ளாகக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களையும்,  பாதுகாப்பு இல்லாத வீடுகளில் வசிக்கும் குடும்பங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்களுக்கு உடனடியாக அழைத்து செல்லவேண்டும். 

✸ நிவாரண முகாம்களில் குடிநீர் சுத்தமான கழிவறை ஜெனரேட்டர் மூலம் மின் வசதி பொது மக்களுக்கு உணவு தயாரிக்கப் போதுமான அளவில் அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் சமையல் பாத்திரங்கள் தேவையான எரிவாயு அடுப்புகள் சிலிண்டர்கள் உணவு தயாரிப்பு சமையல் பொதுமக்களுக்கு தேவையான பால் மற்றும் போர்வை போன்ற வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

✸ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை,  நாகப்பட்டினம்,  தஞ்சாவூர்,  திருவாரூர்,  கடலூர்,  விழுப்புரம்,  செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இடையேயும்,  மாவட்டங்களுக்கு உள்ளும்,  24 11 2020 மதியம் 1 மணி முதல் ஒரு மணி முதல் பேருந்து போக்குவரத்து மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. 

✸ பொதுமக்களும் தங்கள் சொந்த வாகனங்கள் மூலம் அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற தேவைகளுக்காக பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன். 

✸ கடலோர கிராமங்களில்,  மீனவர்களின் வாழ்வாதாரங்கள்,  கட்டுமரங்கள் மின்மோட்டார் பொருத்திய படகுகள்,  மீன் வலைகள் ஆகியவற்றை உரிய முறையில் பாதுகாப்பாக வைத்திட வேண்டும். 

✸ உள்ளாட்சி அமைப்புகள்,  மக்கள் வசிக்கும் தாழ்வான பகுதிகளில் ஏற்படும் நீர் தேக்கத்தை உடனுக்குடன் வெளியேற்ற பம்பு செட்டுகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.  மேலும் நோய் தொற்று பரவாமல் இருக்க உடனுக்குடன் திடக் கழிவுகளை அகற்றி தேவையான கிருமிநாசினி அளிக்க வேண்டும்.  அதற்கு தேவையான அளவுக்கு கிருமிநாசினி இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.  

✸ தடையில்லாமல் குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய,  மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் நீரேற்றும் செய்து முழுமையாக தண்ணீர் நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும்.  தேவைக்கு ஏற்ப ஜெனரேட்டர் வசதி களையும் உறுதிப்படுத்தவேண்டும். 

✸ பெரிய ஏரிகளின்  நீர் கொள்ளளவு,  பாதுகாப்பான அளவில் இருப்பதை உறுதி செய்வதுடன் அவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். 

✸ அனைத்து ஏரிகள் மற்றும் நீர்நிலைகளையும் கள ஆய்வு மேற்கொண்டு கரை உடைப்புகள்  இல்லாமல் இருப்பதை கண்காணிக்கவேண்டும்.  உடைப்பு ஏற்பட்டால்,  உடனடியாக சரி செய்ய போதுமான மணல் மூட்டைகள் உட்பட அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும். 

✸ மழைநீர் கால்வாய்கள் மற்றும் பாலங்கள் அடைப்புகளின்றி உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.  

✸ நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகள் மழையில் நனையாதவாறு பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

✸ தொடர்ந்துப் படிக்க இங்கே கிளிக் செய்யவும் Click Here



No comments:

Post a Comment