இணையதளம் மூலம் மாணவர்களின் கணினி திறனை மேம்படுத்தும் பிளஸ் 1 மாணவர்
காரைக்குடியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவர் இணையதளம் மூலம் மற்ற மாணவர்களின் கணினி திறனை மேம்படுத்தி வருகிறார்.
காரைக்குடியைச் சேர்ந்த கணேஷ்பாபு, ஈஸ்வரி தம்பதியின் மகன் அனிஷ்கிருஷ்ணன்.
இதையும் படிக்கவும் : தட்டு, தாம்பூலத்துடன்வீடு வீடாக சென்ற ஆசிரியர்கள் ஓட்டுப்போட வருமாறு, வாக்காளர்களுக்கு அழைப்பு
தற்போது இவர் சென்னை தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவர் மாணவர்களின் கணினி திறனை மேம்படுத்தும் வகையில் ‘கான்கர்லி’ என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளார். அதில் ‘ஆர்டிபிசியல் இன்டெலிஜன்ஸ்,’ கணினி தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் அதற்கான வேலைவாய்ப்பு குறித்து இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார்.
இதையும் படிக்கவும் :5 வருட தேடலுக்கு பிறகு தாயை கண்டுபிடித்த மகிழ்ச்சியில் மாற்றுத்திறனாளி பெண்
மேலும் அவர் இதுவரை 11 பள்ளிகளுடன் இணைந்து தொழிற்பயிற்சிகளையும் நடத்தி வருகிறார். இவரது இணையதளத்தில் தமிழகம் மட்டுமின்றி உலக நாடுகளில் உள்ள பல மாணவர்கள் கணினி பாடங்களை கற்று வருகின்றனர்.
மேலும் அனிஷ்கிருஷ்ணன் நியூயார்க் ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் வழிகாட்டுதலில் ஆர்டிபிசியல் இன்டெலிஜன்ஸ் குறித்த ஆய்வுப் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் ஐஜிசிஎஸ்இ கணிதத்தில் உலகளவில் முதலிடம் பெற்றுள்ளார். ஐஆர்ஐஎஸ் தேசியப் போட்டியில் இந்திய அளவில் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் ஏராளமான பதக்கங்களையும் குவித் துள்ளார். இவர் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப ஆடைகளை தேர்வு செய்ய உதவும் புதிய தொழில்நுட்பமான ‘கான்சியஸ் குளோதிங்’ என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். இதுபோன்ற பல சமூக பயன்பாட்டுத் திட்டங்களையும் செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து அனிஷ்கிருஷ்ணன் கூறியதாவது:
எனது பெற்றோர் மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகின்றனர். இதனால் 6 வயது முதலே கணினி தொழில்நுட்பத்தை ஆர்வமுடன் கற்கத் தொடங்கினேன். நான் ரோபோடிக்ஸ் பொறியா ளராகி மனித இனத்தை காக்கும் ரோபோக்களை உருவாக்க வேண்டும் என்பதே எனது ஆசை.
ஆர்டிபிசியல் இன்டெலிஜன்ஸ் என்ற தொழில்நுட்பத்தில் எதிர்காலத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன.
இதுகுறித்த புரி தலை ஏழை மாணவர்களுக்குக் கொண்டு செல் வதே எனது நோக்கம். இணையதளம் மூலம் மாணவர்களுக்கு மட்டுமின்றி, யார் வேண்டுமானாலும் பாடங்களை கற்றுக்கொள்ளலாம். இதன்மூலம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளனர், என்று கூறினார்.
No comments:
Post a Comment