அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு ஏப்.12 முதல் விண்ணப்பிக்கலாம் : தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, March 31, 2021

அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு ஏப்.12 முதல் விண்ணப்பிக்கலாம் : தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு ஏப்.12 முதல் விண்ணப்பிக்கலாம் : தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு 


அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு ஏப்ரல் 12-ம் தேதி முதல் ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தொழில்நுட்பக் கல்வி இயக்க கம் சார்பில் அரசு கணினி சான் றிதழ் தேர்வு ஆண்டுதோறும் நடத் தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக இத்தேர்வு நடத்தப்படவில்லை. 


இந்நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கணினி சான்றிதழ் தேர்வு நடத்தப்படுவதாக அறிவிக் கப்பட்டுள்ளது. இதற்கு ஏப்ரல் 12 முதல் 26-ம் தேதி வரை ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்கு நரும், தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான கே.விவேகானந்தன் நேற்று அறி வித்துள்ளார். தேர்வுக் கட்டணம் ரூ.530 ஆக நிர்ணயிக்கப்பட்டுள் ளது. ஆன்லைன் விண்ணப்ப முறை மற்றும் இதர விவரங்களை www.tndte.gov.in என்ற இணைய தளத்தில் அறிந்துகொள்ளலாம். 


அரசு கணினி சான்றிதழ் தேர்வு எழுதுவதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியும், தட்டச்சில் இளநிலை தேர்வில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். அரசு துறைகளில் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணிகளுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 


இந்த பணிகளுக்காக நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு கணினி சான்றிதழ் தகுதி தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றாலும், அவர்கள் தேர்ச்சி பெற்று பணிக்கு தேர்ச்சி பெறும் பட்சத்தில் தகுதிகாண் பருவத்துக்குள் அத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்களது பணி நிரந்தரம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 


 மேலும், தமிழக அரசின் சுற்றுலா அலுவலர் மற்றும் உதவி சுற்றுலா அலுவலர் பணிகளுக்கு கணினி சான்றிதழ் தேர்ச்சி கட்டாயம் ஆகும். இந்த தகுதி அல்லது இதற்கு இணையான தொழில்நுட்பக் கல்வித் தகுதி பெறாதவர்கள் இந்த பணிகளுக்காக டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுக்குக்கூட விண்ணப்பிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment