ஏ.சி. முதல் ஊசிநூல் வரை: 198 சின்னங்கள் அடங்கிய பட்டியல் - தேர்தல் கமிஷன் வெளியீடு
அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத மாநில கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் சின்னங்களை ஒதுக்கி வருகிறது.
5 மாநில சட்டசபை பொதுத்தேர்தலை முன்னிட்டு, நிரந்தர சின்னம் பெறாத அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத மாநில கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் சின்னங்களை ஒதுக்கி வருகிறது. பெரும்பாலான கட்சிகள் சின்னங்களை பெற்று விட்டன.
சின்னங்கள் பெறாத சில கட்சிகள் மற்றும் சுயேச்சைகளுக்கு சின்னங்களை ஒதுக்க தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது. இந்திய தேர்தல் கமிஷனின், யாரும் உரிமை கோரத்தக்க சின்னங்கள் (ப்ரீ சிம்பல்) பட்டியலில் மொத்தம் 198 சின்னங்கள் இடம்பெற்று உள்ளன.
MOST READ மாதிரி வாக்கப் பதிவு துவங்குமுன் நினைவிற்கொள்ளவேண்டிய குறிப்புகள் - (2019 தேர்தலுக்குரியது)
இதில் முதல் சின்னமாக ஏ.சி.யும், கடைசி சின்னமாக ஊசிநூலும் இடம் பெற்று உள்ளன.
மக்கள் நீதி மய்யத்துக்கு வழங்கப்பட்ட ‘டார்ச் லைட்’, நாம் தமிழர் கட்சிக்கு வழங்கப்பட்ட ‘கரும்பு விவசாயி’ போன்ற சின்னங்களும் இதில் உள்ளன. இந்த சின்னங்கள் பட்டியலை தேர்தல் கமிஷன் நேற்று படத்துடன் வெளியிட்டது.
No comments:
Post a Comment