தேர்தல் - 2021 : பணி அலுவலர்களின் மருத்துவ விடுப்பு குறித்து பரிசீலனை செய்யும் பொருட்டு குழு நியமனம் செய்து ஆணை - செயல்முறைகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, March 18, 2021

தேர்தல் - 2021 : பணி அலுவலர்களின் மருத்துவ விடுப்பு குறித்து பரிசீலனை செய்யும் பொருட்டு குழு நியமனம் செய்து ஆணை - செயல்முறைகள்

தேர்தல் - 2021 : பணி அலுவலர்களின் மருத்துவ விடுப்பு குறித்து பரிசீலனை செய்யும் பொருட்டு குழு நியமனம் செய்து ஆணை - செயல்முறைகள் 


மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் செயல்முறைகள் 

பிறப்பிப்பவர்:திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி., இ.ஆ.ப., ந.க.எண்: 29463/2020/11 நாள்: 16.03.2021 

பொருள்: 

தேர்தல்கள் - சட்டப்பேரவை பொதுத்தேர்தல், 2021 - தேனி மாவட்டம் - வாக்குச்சாவடி பணி அலுவலர்கள் நியமித்து ஆணையிடப்பட்டது - பணி அலுவலர்களின் மருத்துவ விடுப்பு குறித்து பரிசீலனை செய்யும் பொருட்டு குழு நியமனம் செய்து ஆணையிடப்படுகிறது. 


படிக்க : தொடர்புடைய ஆவணங்கள் ஆணை: 

தேனி மாவட்டத்தில் அடங்கிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல், 2021 தொடர்பாக வாக்குச்சாவடிகளில் பணிபுரிய வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமித்து ஆணையிடப்பட்டது. இந்நேர்வில், நியமனம் செய்யப்பட்ட அலுவலர்கள் சிலர் பணிக்கு செல்ல மறுப்பதுடன் மருத்துவ காரணங்களின் பேரில் மருத்துவ விடுப்பு அளிப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர்களிடமிருந்து தகவல்கள் வரப்பெற்றுள்ளது. வாக்குச்சாவடி பணியானது தேர்தல் ஆணைத்ததால் முக்கியத்துவம் அளிக்கப்படும் பணியாகும். 

தேர்தல் பணிக்கு நியமிக்கப்படும் பணியாளர்கள் எதிபாராதவிதமாக மருத்துவ விடுப்பில் செல்வதை தவிர்க்க இயலாது. எனினும், சிலர் தேர்தல் பணியை புறக்கணிக்கும் நோக்கில் மருத்து விடுப்பு எடுப்பது என்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிரானது. 


எனவே, மருத்து விடுப்பின் பேரில் செல்லும் அலுவலர்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டு கீழ்க்கண்ட அலுவலர்கள் கொண்ட குழுவினை நியமித்து ஆணையிடப்படுகிறது. 

(திருவாளர்கள்) 

டாக்டர். பாலாஜிநாதன் 
முதல்வர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை. 
தேனி. 

லட்சுமணன் 
இணை இயக்குநர், 
மருத்துவம் மற்றும் சுகாதாரம், பெரியகுளம்.

செந்தில் குமார் 
துணை இணை இயக்குநர், 
தேனி 

மேற்படி அலுவலர்கள் குழுவானது தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டு, மருத்துவ விடுப்பில் செல்லும் அலுவலர்களின் மருத்துவ காரணங்களை பரிசீலனை செய்து அவர்கள் மருத்து விடுப்பில் செல்ல தகுதியுடையவர்களா என்பது குறித்து சான்று அளிக்க வேண்டும்.







No comments:

Post a Comment