92 தொழிற்கல்வி தற்காலிக ஆசிரியர் நிலை 1 பணியிடங்களை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு செய்து அரசாணை வெளியீடு!!! - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, March 30, 2021

92 தொழிற்கல்வி தற்காலிக ஆசிரியர் நிலை 1 பணியிடங்களை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு செய்து அரசாணை வெளியீடு!!!

92 தொழிற்கல்வி தற்காலிக ஆசிரியர் நிலை 1 பணியிடங்களை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு செய்து அரசாணை வெளியீடு! 

சுருக்கம் 

பள்ளிக் கல்வி - மேல்நிலைக் கல்வி - தொழிற்கல்வி -92 தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர் நிலை-1 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது 01.01.2021 முதல் 31.12.2023 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது. 

பள்ளிக் கல்வித்(பக7(1) துறை அரசாணை (டி) எண்.56 நாள்:25.03.2021| திருவள்ளுவர் ஆண்டு 2052 சார்வரி வருடம், பங்குனி 12 படிக்கப்பட்டவை: 

1. அரசாணை (நிலை) எண்.39, பள்ளிக் கல்வித் துறை, நாள் 12.02.1999. 
2. அரசாணை (நிலை) எண்.69, பள்ளிக் கல்வித் துறை, நாள் 20.03.2007. 
3. அரசாணை (1டி) எண்.247, பள்ளிக் கல்வித் (பக7(1)) துறை, நாள் 12.04.2018. 
4. பள்ளிக் கல்வி இயக்குநரின் கடித ந.க.எண்.607/எல்/இ3/2021 நாள். 27.01.2021. 

ஆணை:- 

1. மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் 92 தொழிற்கல்வி ஆசிரியர் நிலை-II பணியிடங்கள் தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்டன. மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் மேற்காண் பணியிடங்கள் தொழிற்கல்வி ஆசிரியர் நிலை-1 பணியிடங்களாக பட்டதாரி ஆசிரியர் ஊதிய விகிதத்தில் நிலை உயர்த்தப்பட்டன. மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் இப்பணியிடங்களுக்கு 01.01.2018 முதல் 31.12.2020 முடிய 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது. 

2. மேலே நான்காவதாக படிக்கப்பட்ட கடிதத்தில், மேற்கண்ட 92 தொழிற்கல்வி ஆசிரியர் தற்காலிக பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு 31.12.2020 அன்றுடன் முடிவடைந்துள்ளதால் 01.01.2021 முதல் 31.12.2023 வரை மேலும் ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் கோரியுள்ளார். 

3. மேலே பத்தி 2-ல் காணும் பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துரு அரசால்
பரிசீலிக்கப்பட்டு, அரசாணை (நிலை) எண்.39 பள்ளிக் கல்வித் துறை நாள் 12.02.1999ல் தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்ட 92 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு 31.12.2020 உடன் முடிவடைந்துள்ளதால், 01.01.2021 முதல் 31.12.2023 வரைஅல்லது தற்காலிக பணியிடங்களுக்கான தேவை குறித்து நிதித் துறையின் மறு ஆய்வில் முடிவெடுக்கும் வரை இதில் எது முந்தையதோ அதுவரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசுஆணையிடுகிறது.

4. இப்பணியிடங்களுக்கான ஊதியம் மற்றும் படிகளுக்கான செலவினம் கீழ்க்கண்ட கணக்குத் தலைப்புகளின் கீழ் பற்று வைக்கப்படும்:-

அரசுப் பள்ளிகள் 

2202 - பொதுக்கல்வி-02 இடைநிலைக்கல்வி-109 அரசு இடைநிலைப் பள்ளிகள்- மாநிலச் செலவினங்கள் - AA அரசு இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மற்றும் பணியாளர்களின் சம்பளம்-301 சம்பளங்கள் (த.தொ.கு.2202 - 02 109 AA 0108) (IFHRMS த.தொ.கு 2202-02-109 - AA - 30100) 

மாநகராட்சி/ நகராட்சி பள்ளிகள் 

2202- பொதுக்கல்வி - 02 இடைநிலைக் கல்வி 109 -அரசு இடைநிலைப் பள்ளிகள்- மாநிலச் செலவினங்கள் - AB - நகராட்சி மற்றும் மாநகராட்சி இடைநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்குச் சம்பளங்கள் 301 சம்பளங்கள் (த.தொ.கு.2202 - 02 109 AB 0106) (IFHRMS த.தொ.கு 2202 - 02 - 109 - AB - 30100) 

அரசு உதவிபெறும் பள்ளிகள் 

2202 - பொதுக்கல்வி-02 இடைநிலைக்கல்வி-110 அரசு சாரா இடைநிலைப் பள்ளிகளுக்கு நிதி உதவி- மாநிலச் செலவினங்கள் - AA அரசு மானியம் பெறும் மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு நிதியுதவி -379 சம்பள மானியங்கள் (த.தொ.கு.2202 -02 110 AA 7902) (IFHRMS த.தொ.கு 2202-02-110 – AA - 37900) 

5. இவ்வாணை நிதித் துறையின் அ.சா.எண்.6504/நிதி (கல்வி-II)/2021 நாள்.27.02.2021-ல் பெறப்பட்ட ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது. 

(ஆளுநரின் ஆணைப்படி) 

தீரஜ் குமார் 
அரசு முதன்மைச் செயலாளர் 

பெறுநர் 

பள்ளிக் கல்வி இயக்குநர், சென்னை-6. சம்பள கணக்கு அலுவலர் (தெற்கு), சென்னை-35. 
சம்பள கணக்கு அலுவலர் (வடக்கு), சென்னை-79. 
சம்பள கணக்கு அலுவலர் (கிழக்கு), சென்னை-5. 
சம்பள கணக்கு அலுவலர், மதுரை. 
சார் சம்பள கணக்கு அலுவலர், பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை-3. 
கருவூலக் கணக்கு ஆணையர், சென்னை-15. 
அனைத்து மாவட்டக் கருவூல அலுவலர்கள் மாநிலக் கணக்காயர், சென்னை-18/35. 

நகல் 

நிதி (கல்வி II) துறை, சென்னை-9. 

DOWNLOAD OFFICIAL NOTICE



You have to wait 25 seconds.

Download Timer

No comments:

Post a Comment