கண்களை மோசமாக பாதிக்கும் "பழக்கவழக்கங்கள்"..!!! - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, March 15, 2021

கண்களை மோசமாக பாதிக்கும் "பழக்கவழக்கங்கள்"..!!!

கண்களை மோசமாக பாதிக்கும் "பழக்கவழக்கங்கள்"..!!! 

"கண்ணைப்போல பாதுகாப்பேன்" என்றெல்லாம் கூறுவார்கள். அதற்கு காரணம், கண்ணை மிகவும் அவதானத்துடன் பாதுகாப்பதாகும். எமது உடலிலுள்ள ஒவ்வொரு அவயவங்களும் மிக முக்கியமானது என்றாலும் கண் அதில் முதன்மையானது. 


கண்ணை இழந்தால், வாழ்க்கையில் ஒளியை இழந்ததை போல ஆகிவிடுவோம். அவ்வாறான கண்ணை குறிப்பாக தற்கால டிஜிட்டல் யுகத்தில் தொழிநுட்பங்களை அளவாக பயன்படுத்தி கண்ணை காத்துக்கொள்ளுங்கள். டிஜிட்டல் திரையை நீண்ட நேரம் பார்ப்பது :இப்போதெல்லாம் நாம் கணினித் திரைகள் மற்றும் மொபைல் போன் திரைகளுக்கு முன்னால் அதிக நேரம் செலவிடுகிறோம். 


இந்தத் திரைகளைப் பார்த்துக்கொண்டு பல மணிநேரம் அவற்றிலேயே செலவிடுகிறோம். இது எமது கண்பார்வையை குறைக்கின்றது. கண்கள் வறண்டு போகும். இவற்றிற்கும் மேலதிகமாக, இது மங்கலான பார்வை, தலைச்சுற்றல் மற்றும் தலைவலிக்கு வழிவகுக்கும். எனவே 20 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து கணினி அல்லது மொபைல் போன் திரைகளை பார்க்க வேண்டாம். 


கண்களுக்கு அவ்வப்போது இடைவெளி கொடுக்க மறக்காதீர்கள்.தூக்கமின்மை : சிலருக்கு இரவில் தாமதமாகவே தூக்கம் வரும். நல்ல கண் ஆரோக்கியத்திற்கு தூக்கம் ஒரு முக்கிய காரணியாகும். தூக்கமின்மை, கண்கள் வறண்டு போக வழிவகுக்கும். மேலும் தூக்கமின்மை என்று வரும்போது, ​​அது கவலை மற்றும் குருட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும். தூக்கமின்மையும் பார்வை மங்கலாகிவிட வழிவகுக்கும். இதற்கு கூடுதலாக, தூக்கமின்மை முகத்தில் பொலிவற்ற தன்மை, அரிப்பு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும்.


எனவே, வயது வந்தவராக இருப்பின் இரவில் குறைந்தது 7 மணிநேர நல்ல தூக்கத்தைப் பெற முயற்சி செய்யுங்கள். புகைத்தல் : புகைபிடித்தல் இதய நோய், புற்றுநோய் மற்றும் சுவாச நோய்கள் போன்ற ஆயிரக்கணக்கான சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதை நாம் நன்றாகவே அறிவோம். ஆனால் புகைபிடிப்பது கண்களை சேதப்படுத்தும் என்பது பலருக்கு தெரியாது. புகைபிடித்தல் குளுகோமா மற்றும் கண்புரை போன்ற கடுமையான கண் நோய்களை ஏற்படுத்துகிறது. 


புகையிலை புகைப்பழக்கத்தில் உள்ள நச்சு இரசாயனங்கள் காரணமாக புகைப்பிடிக்காதவர்களை விட புகைபிடிப்பவர்கள் வயதைக் காட்டிலும் கண் பிரச்சினைகளை உருவாக்கும் அபாயம் அதிகம் என்றும் ஆராய்ச்சி காட்டுகிறது. ஒப்பனை தவறு : தரமற்ற கண் அலங்காரங்கள் மற்றும் காலாவதியான மேக்கப் தயாரிப்புகளின் பயன்பாடும் கண்களை சேதப்படுத்தும். சில தோல் பராமரிப்பு பொருட்கள் கண்களுக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை. 


கண்ணுக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் அவற்றில் இருப்பதால், அவை கண் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், கண்ணிற்கு போட்ட மேக்கப்புடன் அப்படியே நித்திரைக்கு செல்வதும் கண்களுக்கு தீய விளைவை ஏற்படுத்தும். இரவு தூக்கத்தின் போது, ​​நம் கண்கள் இயற்கையான சுத்திகரிப்பு செயன்முறைக்கு உட்படுகின்றன. ஆனால் கண்களைச் சுற்றி ஒப்பனையுடன் நாம் இரவில் தூங்கினால், இந்த செயல்முறை தடுக்கப்பட்டு கண்ணில் பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படலாம்.

No comments:

Post a Comment