அகில இந்திய அளவில்
திருவனந்தபுரம்
கல்வியில் முதலிடம்
நிர்வாகத்தில் கொச்சி டாப்
இந்திய
அளவில் அரசு நிர்வாக செயல்பாட்
டில் கொச்சியும், கல்வியில் திருவனந்
தபுரமும் முதலிடத்தை பிடித்துள்ளன.
நாடு முழுவதும் 111 நகரங்களில்
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற
விவகார அமைச்சகம் நடத்திய ஆய்
வின் முடிவுகளை மத்திய அமைச்சர்
ஹர்தீப் சிங் பூரி நேற்று முன்தினம்
அறிவித்தார்.
அதில், மக்களின்
வாழ்க்கை தரத்தை பொறுத்தவரை
பெங்களூரு சிறந்த நகரங்களில்
முதலிடத்துக்கு தேர்வாகி உள்ளது.
10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்
தொகை கொண்ட நகரங்களில் புனே,
அகமதாபாத், சென்னை மற்றும் சூரத்
போன்றவை அடுத்தடுத்த இடங்களில்
உள்ளன.
பத்து லட்சத்திற்கும் குறைவான
மக்கள்தொகை கொண்ட நகரங்களின்
பட்டியலில் சிம்லா முதலிடத்தில் உள்
ளது. அதைத் தொடர்ந்து புவனேஸ்
வர், சில்வாசா, காக்கிநாடா மற்றும்
சேலம் போன்ற நகரங்கள் உள்ளன.
மாநகராட்சிகளின் நிர்வாக பிரிவில்
கொச்சி முதல் இடத்தை பிடித்துள்
ளது. இதில் திருவனந்தபுரம் 40வது
இடத்தில் உள்ளது. அதே சமயம்,
கல்வியை பொறுத்தவரை திருவ
னந்தபுரம் நாட்டில் முதலிடத்திலும்,
கொச்சி 36வது இடத்தில் உள்ளது.
No comments:
Post a Comment