சங்க காலம் அல்ல..! தற்காலம் தான் - யானை கட்டி போரடித்த விவசாயி
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வரலாற்றில் கூறுவதைப் போல், யானையை வைத்து விவசாயி ஒருவர் வைக்கோல் போரடிக்கும் காட்சி வெளியாகி உள்ளது.
சங்க காலத்தில் நெல் அறுவடையின் போது போரடிக்க யானையை பயன்படுத்தியது பற்றி அறிந்திருப்போம். பின்னர் மாடுகளை வைத்து போரடித்தனர்.
தற்போது அறுவடைக்கு நவீன எந்திரங்கள் வந்ததால் கதிர்களில் இருந்து நெல்மணிகளை பிரித்தெடுக்க போரடித்தல் என்பது அரிதாகிப் போனது.
இந்தநிலையில் மதுரை மேலூர் அருகே வரலாற்றில் கூறுவதைப் போல், யானையை வைத்து வைக்கோல் போரடிக்கும் காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
புலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மதன் என்பவர், அரசு அனுமதியுடன் 40 வயது யானையை வளர்த்து வருகிறார். அவர் தனக்கு சொந்தமான வயலில் அறுவடை செய்த நெற்கதிர்களை தனியாக பிரித்த நிலையில், வைக்கோலை யானையை வைத்து போரடித்துள்ளார்.
விழா காலங்களில் யானையை வாடகைக்கு அழைத்துச் சென்ற அவர், தனது யானையை வைத்த வைக்கோல் போரடித்த காட்சி, தமிழர்களின் நெல் வளம் இவ்வாறு இருந்திருக்கும் என நம்ப பேச வைத்துள்ளது.
மேலும் சங்க காலத்தை ஞாபகப்படுத்திய இந்த காட்சியை அப்பகுதியை சேர்ந்தவர்களும் ஆர்வமாக பார்த்தனர். சமூக வலைத்தளங்களிலும் இந்த காட்சி பரவி வருகிறது.
No comments:
Post a Comment