மத்திய அரசு பணிக்கு தேசிய பொது தகுதி தேர்வு எப்பொழுது? மத்திய அமைச்சர் விளக்கம் - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, March 14, 2021

மத்திய அரசு பணிக்கு தேசிய பொது தகுதி தேர்வு எப்பொழுது? மத்திய அமைச்சர் விளக்கம்

மத்திய அரசு பணிக்கு தேசிய பொது தகுதி தேர்வு  எப்பொழுது?  மத்திய அமைச்சர் விளக்கம்
புதுடெல்லி, மார்ச் 14: 

‘மத்திய அரசு பணிகளுக் கான முதல் தேசிய பொது தகுதி தேர்வு வரும் செப் டம்பரில் நடத்தப்படும், என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித் துள்ளார். மத்திய அரசு பணி களுக்கு ஆள் தேர்வு நடை முறையில் மிகப்பெரிய சீர்த்திருத்தம் கொண்டு வரும் வகையில், பொது தகுதி தேர்வு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது 

இதன்படி, நாடு முழுவ தும் குரூப் பி மற்றும் சி தொழில் நுணுக்கம் அல்லாத) பணிகளுக்கு பொது தகுதித் தேர்வு அடிப்படையில் ஊழியர் கள் நியமிக்கப்படுவார் கள். இத்தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தும். பொது தகுதித் தேர்வு நடத்துவதன் மூலம் விண்ணப்பதாரர்கள் ஒரு முறை தேர்வு எழு திய பிறகு எஸ எஸ்சி ஆர் ஆர்பி, ஐபி பி எஸ் போன்ற எந்தவொரு ஆள்தேர்வு முகமைகளுக் கும் விண்ணப்பிக்க முடி யும். 


பொது தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படை யில் தேர்ந்தெடுக்கப் பட்ட விண்ணப்பதா ரர்களிடம் சிறப்பு தேர்வு நடத்தி, சம்மந்தப்பட்ட ஆள்தேர்வு முகமைகள் பணியாளர்களை தேர்வு செய்யும். இதன்படி, நாட்டின் முதல் பொது தகுதி தேர்வை (சிஇடி) வரும் செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிட்டிருப்ப தாக மத்திய பணியாளர் துறை அமைச்சர் ஜிதேந் திரசிங் நேற்று கூறினார். 

No comments:

Post a Comment