சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் எப்போது? - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, March 17, 2021

சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் எப்போது?

சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் எப்போது? 

கீழ்கண்ட செய்திகளையும் படிக்கவும்




சென்னை பல்கலைக்கழகம் முதல் செமஸ்டர் தேர்வு முடிவுகளை இந்த வார இறுதிக்குள் அறிவிக்கும் என கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து பல்கலைக்கழங்களும் ஆன்லைன் மூலமாக தேர்வுகளை நடத்தின. 

அதன்படி சென்னை பல்கலைக்கழகமும் அதன் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தியது. கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் இந்த ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்பட்ட இந்த தேர்வில் சுமார் 2 லட்ச மாணவர்கள் கலந்து கொண்டனர். 

அதில் பிப்ரவரி 10 முதல் 23 தேதிகளில் நடந்த முதல் செமஸ்டர் தேர்வில் 50,000-திற்கும் அதிகமானோர் ஆன்லைன் தேர்வு எழுதினர். அதேசமயம் சுமார் 60,000 மாணவர்கள் டிசம்பர் 21 மற்றும் பிப்ரவரி 10 ஆகிய தேதிகளில் தங்களின் அரியர் தேர்வுகளை எழுதியுள்ளனர். 

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடக்க இருந்த செமஸ்டர் தேர்வுக்கு சுமார் 1 லட்சம் மாணவர்கள் தங்களின் அரியர் தேர்வுகள் எழுதுவதற்காக விண்ணப்பித்து இருந்தனர். 

இருப்பினும், கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து ரத்து செய்யப்பட தேர்வுகளை டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதி மன்றம் அறிவுறுத்தி இருந்தது.

No comments:

Post a Comment