சில வங்கி காசோலைகள் ஏப்ரல் முதல் செல்லாது - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, March 24, 2021

சில வங்கி காசோலைகள் ஏப்ரல் முதல் செல்லாது

சில வங்கி காசோலைகள் ஏப்ரல் முதல் செல்லாது 
கடந்த, 2020 ஏப்ரலில், யூனியன் வங்கியுடன், ஆந்திரா மற்றும் கார்ப்பரேஷன் வங்கிகள் இணைக்கப்பட்டன. ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் பயன்படுத்தி வந்த சேமிப்பு கணக்கு எண் மாற்றப்படவில்லை.புதிய வங்கியிலும் அதே கணக்கு எண்ணையே தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். 


தற்போது, பழைய வங்கியின், ஐ.எப்.எஸ்.சி., மற்றும் எம்.ஐ.சி.ஆர்., கோடு ஆகியவை மாற்றப்பட்டுள்ளதாக யூனியன் வங்கி தெரிவித்துள்ளது.மேலும் புதிய காசோலைகளை பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம், ஏப்., 1 முதல் அமலுக்கு வருகிறது. அவகாசம் கனரா வங்கி உடன், சிண்டிகேட் வங்கி, 2020ல் இணைக்கப்பட்டது. 


இந்த வங்கி வாடிக்கையாளர்களும், பழைய ஐ.எப்.எஸ்.சி., மற்றும் எம்.ஐ.சி.ஆர்., கோடை பயன்படுத்தி வருகின்றனர். இதை ஜூன் வரை பயன்படுத்தலாம் என, கனரா வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வங்கி நிர்வாகம் வெளியிடவில்லை. இதனால், பழைய காசோலைகளை தொடர்ந்து பயன்படுத்துவது குறித்த சந்தேகம், அதன் வாடிக்கையாளர்களிடையே ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த விளக்கத்தை, வங்கி நிர்வாகம் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  SOURCE NEWS

No comments:

Post a Comment