வாக்களிக்க வருபவரின் உடல்வெப்பநிலை அதிகமாக இருந்தால்?
வாக்களிக்க வருபவரின் உடல்வெப்பநிலை அதிகமாக இருந்தால்?
நாட்டில் கரோனா பெருந்தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெறும் தேர்தல்களுக்கு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி இந்திய தேர்தல் ஆணையம் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை@ வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மே 2-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.
இந்த நிலையில், தேர்தலின் போது கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வாக்குப்பதிவு காலத்துக்கான நெறிமுறைகள்
1. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கான அதிகபட்ச வாக்காளர்கள் எண்ணிக்கை 1500லிருந்து 1000மாகக் குறைக்கப்பட்டுள்ளது.
2. வாக்குச்சாவடி ஒரு நாளுக்கு முன்னதாக தூய்மை செய்யப்படுவது கட்டாயம்.
MOST READ இந்திய அஞ்சல் துறையில் காலி பணியிடங்கள் ஊதியம் : | மாதம் ரூ.19,900 | கடைசி தேதி : 22-03-2021
3. வாக்குச்சாவடி நுழைவாயிலில் உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம்.
4. வாக்காளர்களுக்கு கிருமிநாசினி வழங்குவதும் கட்டாயம்.
5. இந்தப் பணியில் தேர்தல் ஊழியர்களோ, மருத்துவ உதவியாளர்களோ, ஆஷா பணியாளர்களோ ஈடுபடுத்தப்படலாம்.
5. வாக்குச்சாவடியில் ஆண், பெண், மாற்றுத் திறானளிகள் / மூத்த குடிமக்கள் என தனித்தனியாக மூன்று வரிசைகள் இருக்க வேண்டும்.
6. வாக்காளர்களுக்கு முதல் முறை உடல்வெப்ப சோதனை நடத்தும் போது குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக வெப்பம் இருந்தால், சற்று இடைவெளி விட்டு இரண்டாவது முறையும் பரிசோதிக்க வேண்டும்.
இதிலும் உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால், அந்த வாக்காளருக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வாக்குப்பதிவு நிறைவடையும் நேரத்தில் வாக்களிக்க வருமாறு கேட்டுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment