உதவி பேராசிரியர்
பணிக்கான தேர்வு:
என்ஐஎப்டி அறிவிப்பு
சென்னை
தேசிய ஆடை அலங்காரத்
தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்
தின்
(என்ஐஎப்டி) உதவி
பேராசிரியர் பணிக்கான தேர்வு,
டெல்லியில் மட்டுமே நடைபெறும்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஆடை அலங்காரத்
தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்,
மத்திய ஜவுளித் துறை அமைச்ச
கத்தின் கீழ் செயல்படுகிறது.
இந்நிறுவனத்தின் கிளைகள்
சென்னை, மும்பை உள்ளிட்ட
நாட்டின் 16 முக்கிய நகரங்களில்
அமைந்துள்ளன. இந்தநிறுவனங்
களில் உதவி பேராசிரியாராக
பணிபுரிய தேசிய அளவில்
நடைபெறும் எழுத்துத் தேர்வில்
தேர்ச்சி பெறவேண்டும்.
இதற்கிடையே, 16 நிறுவனங்
களில் உள்ள உதவி பேராசிரியர்
காலி பணியிடங்களுக்கான அறி
விப்பு கடந்த ஆண்டு வெளி
யானது.
அதன்படி, வரும் ஏப்ரல்
4-ம் தேதி தேசிய அளவில் தேர்வு
நடைபெறும் என்று என்ஐஎப்டி
அறிவித்திருந்தது. அதன்படி,
என்ஐஎப்டி உதவி பேராசிரியர்
பணியிட தேர்வு ஒவ்வொருமாநில
தலைநகரிலும் நடத்தப்படுவதாக
இருந்தது. இந்நிலையில், தேர்வு
மையம் டெல்லியில் மட்டுமே
அமைக்கப்பட்டுள்ளதாக அறி
விக்கப்பட்டுள்ளது.
இதனால்,
உதவி பேராசிரியர் பணியிடத்
துக்கு தேர்வு எழுதவிருந்தவர்கள்
அதிர்ச்சி அடைந்துள்ளனர். இத
னால், வழக்கம்போல் மாநில
தலைநகரில் தேர்வு மையம்
அமைக்க வேண்டும் என்று தேர்
வர்கள் கோரிக்கை வைத்து
உள்ளனர்.
Great appointments are goes to North Indians supported by BJP.
ReplyDelete