'பூத் சிலிப்' ரெடி! விரைவில் வீடு, விடாக வினியோகம்: - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, March 29, 2021

'பூத் சிலிப்' ரெடி! விரைவில் வீடு, விடாக வினியோகம்:

'பூத் சிலிப்' ரெடி! விரைவில் வீடு, விடாக வினியோகம்: 


திருப்பூர்:மாவட்டத்தில், 23.59 லட்சம் வாக்காளருக்கான, 'பூத் சிலிப்' வினியோகம் நாளை முதல் துவங்குமென, தேர்தல் அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.


சட்டசபை தேர்தல், வரும் ஏப்., 6ம் தேதி நடக்கிறது. மாவட்ட நிர்வாகம் ஓட்டுப்பதிவுக்கான முன்னேற்பாடுகளை துரிதகதியில் மேற்கொண்டு வருகிறது. பிரசாரம், ஏப்., 4ம் தேதி மாலை, 6:00 மணியுடன் ஓய்வு பெறுகிறது.அதற்கு பிறகு, வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டவும், கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

ஓட்டுப்பதிவுக்கு, ஏழு நாட்களே உள்ள நிலையில், ஓட்டுச்சாவடியை முழு அளவில் தயார்படுத்தும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. முன்னதாக, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம், வாக்காளருக்கான, 'பூத் சிலிப்' வினியோகமும் மற்றொருபுறம் துவங்கியுள்ளது. 


மாவட்டத்தில், 11 லட்சத்து, 66 ஆயிரத்து, 417 ஆண்கள்; 11 லட்சத்து, 93 ஆயிரத்து, 104 பெண்கள்; 283 திருநங்கைகள் என, 23 லட்சத்து, 59 ஆயிரத்து, 804 வாக்காளர், இத்தேர்தலில் ஓட்டளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேட்பாளரின் தொகுதி, வரிசை எண், 'பாகம்' எண் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய, 'பூத் சிலிப்' வழங்கப்பட உள்ளது. போட்டோ இல்லாத 'பூத் சிலிப்' அனைத்து வாக்காளர்களுக்கும் தயாராகிவிட்டது.கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தடைந்த, 'பூத்சிலிப்'கள், சட்டசபை தொகுதி வாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. 


உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 'பூத்சிலிப்'களை நேரில் வந்து பெற்றுச்சென்றனர்.நாளை முதல், 'பூத் சிலிப்' வினியோகத்தை, வீடு வீடாக வழங்க திட்டமிட்டுள்ளதாக, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆவணம் வேண்டும் 'பூத் சிலிப்'களில் வாக்காளர் புகைப்படம் இடம் பெறாது. 

இதனால், இதை மட்டும்கொண்டு, வாக்காளர்கள், ஓட்டளிக்க முடியாது. வாக்காளர் அடையாள அட்டையை உடன் எடுத்து செல்ல வேண்டும். வாக்காளர் அட்டை இல்லாதவர்கள், ஆதார் உட்பட தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி, ஓட்டளிக்கலாம்.

No comments:

Post a Comment