ஓட்டுச்சாவடிகளில் 'வெப் கேமரா' பள்ளிகளை திறந்து வைக்க உத்தரவு - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, March 21, 2021

ஓட்டுச்சாவடிகளில் 'வெப் கேமரா' பள்ளிகளை திறந்து வைக்க உத்தரவு

ஓட்டுச்சாவடிகளில் 'வெப் கேமரா' பள்ளிகளை திறந்து வைக்க உத்தரவு 

'வெப் கேமரா பொருத்தும் பணிக்காக, ஓட்டுச் சாவடிகளாக மாற்றப்பட்டுள்ள பள்ளிகளை திறந்து வைக்க வேண்டும்' என, தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுக்காக, மாநிலம் முழுவதும், 88 ஆயிரத்து, 936 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 


அதில், பதற்றமான ஓட்டுச் சாவடிகள் கண்டறியப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த, தலைமை தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில், 46 ஆயிரம் ஓட்டுச்சாவடிகளில், 'வெப் கேமரா' பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து, தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: எந்தெந்த ஓட்டுச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட வேண்டும் என, 22, 23ம் தேதிகளில் ஆய்வு செய்யப்படுகிறது. 


அதில், முடிவு செய்யப்பட்ட ஓட்டுச்சாவடிகளில் வரும், 27 முதல் ஏப்ரல், 2 வரை வெப் கேமரா பொருத்தும் பணி நடக்கிறது. பின், அந்த ஓட்டுச்சாவடிகளில் மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டு, வெப் கேமரா கண்காணிப்பு ஒத்திகை நடத்தப்பட உள்ளது.முதல் ஒத்திகை வரும் ஏப்ரல், 3 மற்றும் 4, இறுதி ஒத்திகை, 5ம் தேதியில் நடத்தப்படுகிறது. 

அதற்காக, ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள, பள்ளிகளை திறந்து வைக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளுக்கு, தலைமை தேர்தல் கமிஷன் தகவல் அளித்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment