தபால் ஓட்டு பெறுவது எப்படி?
1. பூத் அதிகாரியிடம் 12D பார்ம் வழங்க வேண்டும்
2. அந்த விண்ணப்பத்தை தபால் ஓட்டு போட விரும்பும் வாக்காளரின் வீட்டுக்கு சென்று முழு தகவலையும் பெற்று அவர்களது ஒப்புதலைப் பெறவேண்டும்
3. மூத்த அதிகாரி ஒப்புதல் பெறும் போது தேர்தல் அதிகாரி உடனிருக்க வேண்டும்.
இதையும் படிக்கவும் : யார்-யாருக்கு தபால் ஓட்டு? தேர்தல் ஆணையம் அறிவிப்பு
4. வாக்காளர் அப்போது வீட்டில் இருக்க வில்லை என்றால் அடுத்த ஐந்து நாட்களுக்குள் மீண்டும் வீட்டிற்கு சென்று பெற வேண்டும்.
5. தேர்தல் அறிவிப்பை முறைப்படி வெளியிட்ட 5 நாட்களுக்குள் 12D பார்ம் விண்ணப்பம் பெறப்படவேண்டும்.
6. 12D பார்ம் வாங்கும் பணியை அந்தப் பகுதி தேர்தல் அதிகாரி கண்காணிக்க வேண்டும்.
இதையும் படிக்கவும் : முதல்முறை வாக்காளர்களுக்கு மின்னனு வாக்காளர் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்
7. 12D பார்ம் பெற்ற பிறகு அதை அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் அதிகாரி வழங்க வேண்டும்.
8. 12D பார்ம் கொடுத்த வாக்காளர் வீட்டுக்கு குறைந்தது இரண்டு தேர்தல் அதிகாரிகள் சென்று தபால் வாக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் அங்கு செல்லும் நேரம், தேதி ஆகிய தகவல்களை முன்கூட்டியே வாக்காளர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
9. அதன் பிறகு தேர்தல் தேதிக்கு முந்தைய நாளில் நேரில் சென்று வாக்கு பதிவு செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment