தேர்தல் 'மை'யை அழிக்க முடியாதது ஏன்?
தேர்தல் 'மை'யை அழிக்க முடியாதது ஏன்?
தேர்தல் மை, அழியாத மை என்று அழைக்கப்படும் பாஸ்பரிக் மை.. இந்த அழியாத மை தான் தேர்தலில் பல முறைகேடுகள் நடக்காமல் தடுக்கும் முக்கியப் பங்காற்றுகிறது.
MOST READ தேர்தல் 'மை'யை அழிக்க முடியாதது ஏன்?
வாக்காளர்களின் இடது கையின் ஆள்காட்டி விரலில் விரல் நகமும், தோலும் இணையும் இடத்தில் ஒரு கோடு போன்று@ தீட்டப்படுகிறது இந்த மை.
ஒரு தேர்தலில் ஒரு வாக்காளர் இரண்டு முறை தனது வாக்கினை செலுத்த முடியாமல் தடுக்கும் கவசமாக இந்த அழியாத மை விளங்குகிறது.
ஏனென்றால் விரலில் வைக்கப்படும் இந்த மையை அவ்வளவு எளிதாக அழித்து விட முடியாது.
இந்தியாவுக்கு விடுதலை கிடைத்து சுமார் 12 ஆண்டுகளுக்குப் பின் கர்நாடகத்தில் (அப்போது மைசூரு) நடைபெற்ற பொதுத் தேர்தலில்தான் இந்த அழியாத மை முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது.
அப்போது வாக்காளர்களிடம் அடையாள அட்டை இல்லாததால், இந்த மை பயன்படுத்தும் முறை கொண்டு வரப்பட்டது. பிறகு அடையாள அட்டைகள் பயன்பாட்டுக்கு வந்தபிறகும், ஒருவரே பல வாக்குகளை அளிப்பதைத் தடுக்கும் வகையில் இந்த முறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பெயிண்ட் அண்ட் வார்னிஷ் லிமிடட் என்ற நிறுவனம்தான் தேர்தலுக்கான இந்த அழிக்க முடியாத மையை உற்பத்தி செய்து வருகிறது. நாட்டில் அழியாத மை தயாரிக்க அதிகாரப்பூர்வ அனுமதி பெற்ற ஒரே நிறுவனம் இதுவாகும்.
இந்த நிறுவனம் இந்தியாவுக்கு மட்டுமல்ல, சுமார் 25 உலக நாடுகளுக்கும் இந்த அழியாத மையை தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்த நிறுவனத்துடன் இந்திய தேர்தல் ஆணையம், மத்திய சட்ட அமைச்சகம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
அதன்படி, நாட்டில் நடக்கும் தேர்தல்களின்போது, தேவையான அளவில் இந்த நிறுவனம் அழியாத மையைத் தயாரித்துக் கொடுக்கும். இது ஒரு கர்நாடக அரசின் கீழ் இயங்கும் நிறுவனமாகும்.
இந்த அழியாத மை சில்வர் நைட்ரேட் என்ற ரசாயனத்தைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஆனால் இந்த மை தயாரிக்கும் வழிமுறை இதுவரை ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.
இதன் உண்மையான நிறம் ஊதா நிறமாகும். இந்த மையை கையில் வைக்கும்போது, புற ஊதா வெளிச்சம் இந்த மையின் மீது பட்டு, அதன் அர்த்தி 7 முதல் 25 சதவீதமாக மாறும். அப்போது மை, மனித சருமத்தின் செல்களில் கலந்துவிடும். எனவே, அந்த மையை அழிக்க முடியாது. அதனால்தான், முதல் மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு ஊதா நிறத்திலும், பிறகு அடர் நிறத்திலும் காணப்படும்.
MOST READ தருமபுரி மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்
முதல் 10 நாள்களுக்கு இந்த மை பளீச்சென்று காணப்படும். பிறகுதான் மங்கத் தொடங்கும்.
இந்த மை வைத்த சருமத்தில் இருக்கும் செல்கள் முற்றிலும் அழிந்து, புதிய செல்கள் உருவாகும்போதுதான் இந்த மை முற்றிலும் மறையும். அதே வேளையில், நகத்தில் வைக்கப்பட்ட மை, அந்த இடத்திலிருக்கும் நகம் வளர்ந்து வெட்டப்படும் வரை அப்படியே இருக்கிறது. அதாவது சுமார் 4 மாதங்கள் வரை ஆகலாம்.
ஒரு குப்பியில் இருக்கும் 5 மில்லி லிட்டர் தேர்தல் மையைக் கொண்டு 300 வாக்காளர்களின் விரல்களில் மை தீட்டலாம். அதேவேளையில், இந்த மை நிரப்பப்பட்ட பேனாவைக் கொண்டு 5 மில்லி லிட்டர் மையில் 600 பேருக்கு மை தீட்டலாம்.
No comments:
Post a Comment