சட்டமன்றத் தேர்தல் பணிக்கு வாக்கு சாவடி அலுவலர்கள் நியமனம் - பணிக்கு ஆஜராகாதது - தொடர்பாக - மாவட்ட ஆட்சியர் அவர்களின் செய்தி குறிப்பு
அனுப்புநர்
டாக்டர்.க.விஜயகார்த்திகேயன், இ.ஆ.ப.,
மாவட்ட தேர்தல் அலுவலர் /
மாவட்ட ஆட்சித் தலைவர்,
திருப்பூர்.
பெறுநர்
சார் நிலை அலுவலர்கள்,
திருப்பூர் மாவட்டம்.
ந.க.19867/2020/கே1,
நாள்: 19.03.2021.
அய்யா,
பொருள்:-
தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 - திருப்பூர் மாவட்டம்
சட்டமன்றத் தேர்தல் பணிக்கு வாக்கு சாவடி அலுவலர்கள்
நியமனம் - பணிக்கு ஆஜராகாதது - தொடர்பாக.
மாவட்ட தேர்தல் அலுவலரின் பணி நியமன ஆணைகள்
பார்வை:-
எதிர்வரும் 06.04.2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி திருப்பூர்
மாவட்டத்தில் தேர்தல் பணிகளின் ஒரு பகுதியாக வாக்கு சாவடி அலுவலர்கள் பல்வேறு
அரசுத்துறையிலிருந்து நியமனம் செய்யப்பட்டு அவர்களுக்கு உரிய பணி நியமன
ஆணைகள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு சார்வு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான
நிலையில் அநேக அலுவலர்கள் மருத்துவ காரணங்களைக் காட்டி தேர்தல் பணியிலிருந்து
விலக்கு அளிக்கவும், ஒரு சில அலுவலர்கள் பணி நியமன ஆணை பெற்று கொண்டிருந்தும்
பயிற்சி வகுப்பிற்கு ஆஜராகாத நிலையும், சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள்
மூலமாக அறியப்பட்டது.
எனவே தேர்தல் பணி நியமன ஆணை பெற்று பயிற்சிக்கு
ஆஜராகாமல் மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு கடந்த பிப்ரவரி 2-ம் வாரத்திலிருந்து
விண்ணப்பித்துள்ள விண்ணப்பங்களை உடனடியாக பொது சுகாதாரத்துறைக்கு இதற்கென
தனியே நியமிக்கப்பட்ட மருத்துவக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிடவும், அவர்களை
மருத்துவக்குழுவின் முன்பாக பரிசோதனைக்கு ஆஜராகி... தெரிவித்திடவும், அவர்களது
பெயர் குறித்த விபரங்களை உடனடியாக திருப்பூர் மாவட்ட மருத்துவப்பணிகள் இணை
இயக்குனருக்கும், இவ்வலுவலகத்திற்கும்
அனுப்பி
வைக்குமாறு கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.
2) இவர்கள் பணிபுரிய தகுதியுடையவர்கள் என மருத்துவக்குழு சான்று வழங்கும் பட்சத்தில் அவர்கள் பெயரில் உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதுடன் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அவர்களது பெயர் விவரங்களை உடன் தெரிவிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பிற தேர்தல் பணி நியமன ஆணைகள் ஏதும் வழங்கப்படாமல் வாக்குச்சாவடி அலுவலர்களாக மட்டும் பணி
நியமன உத்தரவு பெற்றிருந்தும் பயிற்சிக்கு ஆஜராகாத அலுவலர்களை சம்பந்தப்பட்ட
தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பாக 20.03.2021 அன்று நண்பகல் 12.00
மணிக்குள் ஆஜராக தெரிவித்து பத்திரிக்கை செய்தியும் வெளியிடப்பட்டுள்ளது.
அவ்வாறான அலுவலர்கள் தங்கள் துறையில் இருப்பின் அலுவலர்களை உடனடியாக
சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் முன் ஆஜராகி தங்கள் வருகையினை பதிவு
செய்து கொள்ள அறிவுறுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தேர்தல் பணி என்பது
தலையாய கடமை என்பதை உணர்ந்து இப்பணியினை புறக்கணிக்கும் அலுவலர்கள் மீது
உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளத்தக்க வகையில் விரைவு நடவடிக்கை
மேற்கொள்ளுமாறும், அவ்விவரத்தினை உடனடியாக
மாவட்ட தேர்தல் நடத்தும்
அலுவலருக்கு தெரிவிக்கவும் அனைத்து அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஓம்/-க.விஜயகார்த்திகேயன்
மாவட்ட தேர்தல் அலுவலர் /
மாவட்ட ஆட்சியர்,
திருப்பூர்.
நகல்:
அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள்/
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்,
திருப்பூர் மாவட்டம்
உண்மை நகல் / உத்தரவுப்படி // மாவட்ட ஆட்சியருக்காக
மாவட்ட ஆட்சியரின் நேர்முக
உதவியாளர்
(பொது),
திருப்பூர்.
No comments:
Post a Comment