புதுச்சேரி கல்லூரிகளுக்கு நாளை முதல் ஆன்லைன் வகுப்பு
புதுச்சேரியில் அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை முதல் 6 நாள்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்பு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதேபோல, புதுவையிலும் கரோனா பரவலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
புதுவையில் தற்போது சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரம் காரணமாக, பொதுமக்கள் ஆங்காங்கே முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் கூட்டம் கூட்டமாக திரள்கின்றனா்.
இதனால் கரோனாவின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதால், புதுவையில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. மேலும், முதலாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரையிலான மாணவா்கள் தோ்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் புதுச்சேரியில் அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை முதல் 6 நாள்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்பு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமசயம், இறுதி பருவ மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகளை மட்டுமே நேரடி வகுப்பு மூலம் நடத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment