கேந்திரிய வித்யாலயா பள்ளி - ஆன்லைன் மாணவர் சேர்க்கை - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, March 27, 2021

கேந்திரிய வித்யாலயா பள்ளி - ஆன்லைன் மாணவர் சேர்க்கை

கேந்திரிய வித்யாலயா பள்ளி - ஆன்லைன் மாணவர் சேர்க்கை


கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கு, ஏப்ரல் 1ம் தேதி, ஆன்லைன் பதிவு துவங்குகிறது, அரசு அதிகாரிகளின் பிள்ளைகள் மட்டும் தான் படிக்க முடியும் எனும் கருத்து மக்கள் மத்தியில் உள்ள நிலையில் பொதுவான மக்களும் படிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன, பெரும் பொருட்செலவு இல்லாத இப்பள்ளிகளில் நம் பிள்ளைகளை சேர்ப்பதற்கு முயற்சிக்கவும். இந்தப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் கிடையாது ஒன்றாம் வகுப்பிலிருந்துதான் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர் 


 தற்போது, முதலாம் வகுப்பில் சேர, ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம். கேந்திரிய வித்யாலயா பள்ளியின் ஒவ்வொரு வகுப்பிலும் சுமார் 40 மாணவர்கள் வரையில் மட்டுமே சேர்க்கப்படுவர். இதில் 25 சதவிகித இடங்கள் கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் சேர்க்கப்படுகின்றன. தற்போது வரும் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பில் மாணவர்கள் சேர ஏப்ரல் 1ம் தேதி முதல் 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் 


 மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் RTE கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் சேர்க்கப்படும் மாணவர்கள், கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை! KV பள்ளிகளில், ஒன்று முதல், பிளஸ் 2 வரை CBSE பாடதிட்டத்தின் முறையில் படிக்கலாம் நடப்பு கல்வி ஆண்டில், ஒன்றாம் வகுப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏப்ரல் 1 ம் தேதி காலை, 10 மணிக்கு துவங்க உள்ளது. 

 ஆன்லைனில் விண்ணப்பிக்க:- https://kvsonlineadmission.kvs.gov.in/index.html

No comments:

Post a Comment