(சமக்ர சிக்ஷா) மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் வழிகாட்டுதலின்படி பள்ளி செல்லா/இடைநின்ற மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளை கண்டறிந்து பயிற்சியளித்து மீளப் பள்ளிகளில் சேர்த்தல் - பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மண்டல மேற்பார்வையாளர்களுக்கு (பொ) வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல்
முன்னிலை : முனைவர்.ஆ.அனிதா அவர்கள்
ந.க.எண்.61/00sC-Survey & MHRD guidelines/SS/2021 நாள்.26.02.2021
பொருள் :
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (சமக்ர சிக்ஷா) - சென்னை மாவட்டம் - மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் வழிகாட்டுதலின்படி பள்ளி செல்லா/இடைநின்ற மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளை கண்டறிந்து பயிற்சியளித்து மீளப் பள்ளிகளில் சேர்த்தல் - பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மண்டல மேற்பார்வையாளர்களுக்கு(பொ) வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் – சார்ந்து.
பார்வை :
1.மாநிலத் திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை-6 அவர்களின் கடித ந.க.எண்.633/ஆ1/பசெகு/ஒபக/2020 நாள் 30.01.20212. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை, நேர்முகக் கடிதம் ந.க.எண்.18-94/2020-IS நாள் 07.01.20213. மாநிலத் திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை-6 அவர்களின் கடித ந.க.எண்.633/ஆ1/பசெகு/ஒபக/2020 நாள்: 26.2.2021 ****
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் வாயிலாக ஒவ்வொரு ஆண்டும், மும்முறை (ஏப்ரல்
பே, அக்டோபர் மற்றும் ஜனவரி) மாதங்களில் 6 முதல் 18 வயது வரையுள்ள பள்ளி
செல்லா/இடைநின்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளை கண்டறிவதற்காக
அனைத்து குடியிருப்புகளிலும் (door-to-door) கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது.
அவ்வாறு கண்டறியப்பட்ட அனைத்துக் குழந்தைகளும், குழந்தைகளுக்கான இலவச மற்றும்
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009-ன்படி அருகாமையிலுள்ள பள்ளிகளில்
சேர்க்கப்படுகின்றனர். 2020-21 ஆம் ஆண்டு கோவிட்-19, பெருந்தொற்று காரணமாக, முதல்
கட்ட வீடு வாரியான கணக்கெடுப்புப் பணி 21.10.2020 முதல் 10.12.2020 வரை நடைபெற்றது.
பார்வை 1-ன்படி இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு பணியானது 02.02.2021 முதல்
அனைத்து குடியிருப்புகளிலும் நடைபெற்று வருகிறது. இக்கணக்கெடுப்புப் பணியினை பார்வை 2ன் அடிபஙபடையில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை கடிதத்தில் வழங்கப்பட்டுள்ள கீழ்க்காணும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தொடர்ந்து
நடத்திடுமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள்
மற்றும்
மண்டல
மேற்பார்வையாளர்கள்(பொ) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை கடிதத்தில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்.
1. பள்ளி செல்லாக் குழந்தைகள் மற்றும் கற்றல் இழப்பைக் குறைப்பதற்கான வழிமுறைகள்.
-
ஆசிரியர்கள், வள மையப் பயிற்றுநர்கள், பள்ளி மேலாண்மைக் குழுவுடன் (SMC) இணைந்து வீடு வாரியான கணக்கெடுப்புப் பணியிணை நடத்தி 6 முதல் 18 வயது வரையுள்ள பள்ளி வயதுக் குழந்தைகளின் விவரங்களை முழுமையாக சேகரித்து, அனைத்துக் குழந்தைகளும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனரா என்பதனை உறுதி செய்வதோடு தொடர்ந்து கண்காணிக்கவும் வேண்டும். -
வரும் 2021-22 ஆம் நிதியாண்டிற்கான பள்ளி செல்லாக் குழந்தைகளைக் கண்டறிதல் வேண்டும். -
100% மொத்த சேர்க்கை விகித இலக்கினை அடைய முன்பருவக் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை) முயற்சி மேற்கொள்ள வேண்டும். -
6 முதல் 18 வயது வரையுள்ள அனைத்து பள்ளி செல்லாக் குழந்தைகளையும் கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும்.இணைய வழிக் கல்வி வசதியைப் பெற இயலாத குழந்தைகளின் கற்றல் இழப்பைக் குறைப்பதற்காக கல்வித் தன்னார்வலர்கள் (EVs) மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளின் கிராமம் / வீட்டிற்கே சென்று பெற்றோர் அனுமதியுடன் கோவிட் 19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி கல்வியளித்தல் (Home schooling) வேண்டும். -மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கு சிறப்பாசிரியர்கள் மூலம் வீட்டு வழிக் கல்வியளித்தல் வேண்டும்.
II. பள்ளிகள் திறக்காத நிலையில் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஆதரவுகள்.
மாணவர்களின் வீடுகளுக்கு நேரிடையாக சென்று மனநல ஆலோசனைகள் மற்றும்
விழிப்புணர்வு வழங்குதல் வேண்டும்-
வீட்டு வழிக் கல்வியை (Home scholling) மேலும் வலுவூட்டுவதற்காக மாணவர்களுக்கு பாடப்புத்தககங்களுடன் சேர்ந்து workbooks, worksheet, supplementary and graded
material வழங்குதல் வேண்டும்.
வகுப்பு வாரியாக, பாடம் வாரியாக ஆசிரியர்கள் ஒரு குழுவாக சேர்ந்து
மாணவர்களுக்கு தொலைபேசி வாயிலாக வாரம் ஒரு முறையோ பதினைந்து
நாட்களுக்கு ஒருமுறையோ (அல்லது) நேரிடையாகவோ மாணவர்களை சந்தித்து
வழிகாட்டுதல் வேண்டும்.
-
கற்றல் இழப்பைக் குறைப்பதற்காக இணைய வழிக் கல்விக்கான வாய்ப்பை
மாணவர்களுக்கு வழங்குதல் வேண்டும் (Kalvi TV, You tube channel).
-
மாணவர்களை தொடர்ந்து பள்ளிகளில் தக்க வைப்பதற்காக பாடப்புத்தகங்கள்,
சீருடைகள் மற்றும் மதிய உணவு (Noon-meal dry ration) மாணவர்களுக்கு
வழங்கப்படுவதை உறுதி செய்தல் வேண்டும்.
-
பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ள
அனைத்து மாற்றுத்திறனுடைய பெண்
குழந்தைகளுக்கும் Direct Benefit Transfer மூலம் உதவித் தொகையை உரிய நேரத்தில்
வழங்கப்பட வேண்டும்.
-
குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கும், குழந்தைகளின் பாதுகாப்பை
உறுதி செய்வதற்கும் வலுவான கட்டமைப்பை ஏற்படுத்துதல் வேண்டும்.
III. பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள்
-
மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் இடைநிற்றலை தவிர்ப்பதற்காக, பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் பள்ளி ஆயத்தப் பயிற்சி கட்டகத்தினை ஒன்று முதல் இரண்டு மாதங்களுக்கு பயிற்றுவித்து மாணவர்களை வகுப்பறைச் சூழலுக்கு தயார்படுத்துதல் வேண்டும். -வகுப்பு வாரியாக மாணவர்களின் கற்றல் நிலையை கண்டறிந்து, சிறப்புக் கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும். - குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-இன்படி ஒன்று முதல் எட்டாம் வகுப்புவரை மாணவர்களை இடைநிறுத்தம் (deletion) செய்யக் கூடாது. -மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக, பள்ளி நூலக- மாணவர்களின் படைப்பாற்றல் திறனை மேம்படுத்த முயற்சி மேற்கொள்ளுதல் வேண்டும். -மாணவர்களின் கணிதத் திறனை மேம்படுத்துவதற்காக, மத்தியக் கல்வி வாரியம் 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு DIKSHA Portal-ல் ஒவ்வொரு வாரமும் பதிவேற்றம் செய்யப்படும் கணித வினாக்களை பயன்படுத்தலாம். கணிதம் சார்ந்த விளையாட்டுக்களையும்/Apps-களையும் பயன்படுத்த ஆர்வமூட்டுதல் வேண்டும். -கற்றல் இழப்பு மற்றும் கற்றலில் உள்ள சமச்சீரற்ற நிலையை போக்குவதற்காக Remedial Teaching-யை விரிவாக செயல்படுத்த வேண்டும்.
IV. சேர்க்கைப் பேரணி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
-
2021-2022 ஆம் கல்வியாண்டில் புதிய மற்றும் பழைய மாணவர்களை வரவேற்பதற்காக சேர்க்கைப் பேரணி நடத்துதல் வேண்டும் (Back to school campaign, Praveshotsav, school chalo abhiyan etc). -Media and community mobilization நிதியின் மூலம் பெற்றோர்களிடம் நம்பிக்கை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திட, பள்ளி அளவில் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து மாணவர்களை பள்ளிகளில் சேர்ப்பதற்கும், தொடர்ந்து பள்ளிக்கு அனுப்புவதற்கும் வழிவகை செய்தல் வேண்டும். -கோவிட் – 19 பெருந்தொற்று காரணமாக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி (6 feet) மற்றும் கை கழுவும் பழக்கத்தை மாணவர்களிடம் ஊக்குவித்தல். இதற்காக சுவரொட்டிகள், animation film, சுவர் விளம்பரம், infographics மற்றும் IEC material தயார் செய்து வழங்குதல் வேண்டும். -பாதுகாப்பான முறையில் பள்ளிகள் திறக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, கை சுத்தம், பாதுகாப்பான குடிநீர் மற்றும் குழுச் சுகாதாரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும். -இதற்கான நிதியை "Composite School Grants, Safety and Security in schools and for Teachers" என்ற நிதித் தலைப்பின்கீழ் மேற்கொள்ளலாம். இது குறித்து அனைத்து பள்ளிகளுக்கும் விரிவான சுற்றறிக்கை ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது.
V. ஆசிரியர் திறன் மேம்பாடு:
* கோவிட்-19 பெருந்தொற்று சார்ந்து,-
தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் (NCERT) தயாரிக்கப்பட்டுள்ள
மாற்றியமைக்கப்பட்ட கால அட்டவணையை 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயன்படுத்த
ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
மேற்கண்ட விரிவான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, செயல்பாடுகள் சிறப்பாக
நடைபெறுவதற்கு உரிய செயல்திட்டம் தீட்டி எந்தவித புகாருக்கும் இடமில்லாமல் சிறப்பாகச்
செயல்பட அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மண்டல மேற்பார்வையாளர்கள்
(பொர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
oblongo
1 หัวฯ
முதன்மைக் கல்வி அலுவலர் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்விசென்னை மாவட்டம்
பெறுநர்
1. அனைத்து மண்டல மேற்பார்வையாளர்கள் (பொ) ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை.2. அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் (மண்டலம் வழியாக) 2/2/ பணிவு
நகல்:
1. மாநிலத் திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை-06.2. இணை ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை -03.
நகல்:
1. கல்வி அலுவலர், பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை. அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பப்படுகிறது.2. உதவி கல்வி அலுவலர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை.3. மாவட்ட கல்வி அலுவலர்கள் (மத்திய, கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு)4. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், சென்னை.
DOWNLOAD CEO PROCEEDINGS (USE DOWNLOAD BUTTON - THANK YOU!!!)
Download Timer
No comments:
Post a Comment