நகங்களைப் பராமரிப்பது எப்படி? - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, March 18, 2021

நகங்களைப் பராமரிப்பது எப்படி?

நகங்களைப் பராமரிப்பது எப்படி? 


உடல் உறுப்புகளை சரியாகப் பராமரிப்பது என்பது ஆண், பெண் இருபாலருக்கும் அவசியமானது. அந்த வகையில், நகங்களை பராமரிப்பது அவசியம். பொதுவாக பெண்கள் மட்டுமே நகங்கள் பராமரிப்பில் அதிக ஈடுபாடு காட்டுவதுண்டு. ஆனால், ஆண்களும் நகங்களை உடைக்காமல் பராமரிக்க வேண்டியது அவசியம். 



 நகங்களை பராமரிப்பது குறித்த சில டிப்ஸ்... 

 ► நகங்களை கடிப்பதை முதலில் நிறுத்த வேண்டும். 

 ► கடினமானவற்றை உரிப்பது, திறப்பது என உங்களை உடைக்காதீர்கள். நகங்களின் வேர் பாதிக்கப்பட்டு விட்டால் மீண்டும் நகம் வளர்வது கடினமாகி விடும். 

 ► நகங்களை வெட்டும் முன் அவற்றின் மேல் கொஞ்சம் எண்ணெய் தடவி வெட்டினால் சுலபமாக இருக்கும். 

 ► ஏதாவது ஒரு எண்ணெய்யை லேசான சூட்டில் நகங்களுக்கு மசாஜ் செய்தால் நகங்கள் ஆரோக்கியமாக உடையாமல் அதேநேரத்தில் அழகாக இருக்கும். 

 ► நகங்கள் ஆரோக்கியமாக இருக்க எண்ணெய் மசாஜே சிறந்தது. 

 ► லேசான சூட்டில் நீரிலும் நகங்களை சிறிது நேரம் வைத்தால் அதில் உள்ள இறந்த செல்கள் நீங்கிவிடும். 

 ► பெரும்பாலானோர் கை நகங்களை மட்டும் அழகாக வைத்திருப்பர். ஆனால், கால் நகங்களுக்கும் அதே முக்கியத்தும் கொடுக்க வேண்டியது அவசியம்

No comments:

Post a Comment