முதல்முறை வாக்காளர்களுக்கு மின்னனு வாக்காளர் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்
முதன் முறையாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தவர்கள், வாக்காளர் அடையாள அட்டையை, தங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்வதற்காக, இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.
தமிழகத்தில், வாக்காளர்பட்டியல் திருத்தப் பணி முடிந்து, ஜன., 20ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. முதன் முறை வாக்காளர்கள், இந்த பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.தங்கள் மொபைல் போன் எண் வழங்கியவர்கள், மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
இதற்காக வரும், 13, 14ம் தேதிகளில், 30 ஆயிரத்து, 400 இடங்களில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடத்தும்படி, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில், முதன் முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள், இந்த முகாமை பயன்படுத்தி, தங்கள் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை, தங்கள் மொபைல் போன் அல்லது கம்ப்யூட்டரில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இத்தகவலை, தமிழகதலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
MOST READ தபால் மூலம் வாக்களிக்க வரும் 16-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்: தேர்தல் அதிகாரி அறிவிப்பு
செய்திவெளியீடு
சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் -
1. 2021 இன் போது, புதிதாக வாக்காளர்
பட்டியலில் முதன்முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் தங்களது
செல்லிடப்பேசி எண்ணை வழங்கிய வாக்காளர்கள் அனைவருக்கும் மின்னனு
வாக்காளர் அடையாள அட்டையினை பதிவிறக்கம் செய்து கொள்ள ஏதுவாக
அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் (Designated Polling Station
Locations) இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம்
உத்தரவிட்டுள்ளது.
2. மேற்கண்ட உத்திரவின்படி, எதிர்வரும் 13.03.2021 (சனிக்கிழமை) மற்றும்
14.03.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி
அமைவிடங்களிலும் (Designated Polling Station Locations) (தோராயமாக
30,400 இடங்கள்) சிறப்பு முகாம் நடத்த அனைத்து மாவட்டத் தேர்தல்
அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
3. சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2021 இன் போது வாக்காளர்
பட்டியலில் முதன்முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் இம்முகாமினைப்
பயன்படுத்தி தங்களது மின்னனு வாக்காளர் அடையாள அட்டையினை
தங்களது செல்லிடப்பேசி/ கணினியில் பதிவிறக்கம் செய்து கொள்ள
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தலைமைத் தேர்தல் அதிகாரி
மற்றும் அரசு முதன்மைச் செயலாளர்.
வெளியீடு:
இயக்குநர்,
செய்தி மக்கள் தொடர்புத்துறை,
சென்னை-9
Download Timer
No comments:
Post a Comment