தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
MOST READ தேர்தல் 'மை'யை அழிக்க முடியாதது ஏன்?
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், தென் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment