தேர்தல் - பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் அரசு பணியாளர்களுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள்
கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
ந.க.எண்.2093/«1/2020 நாள்:
.03.2021
பொருள்:
ஏப்ரல் 2021 - தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் பள்ளிக்கல்வித்
துறையில் பணியாற்றும் அரசு பணியாளர்களுக்கான தேர்தல் நடத்தை
விதிமுறைகள் தெரிவித்தல் - சார்பு.
பார்வை:
1.அரசு கூடுதல் செயலரின் கடிதம் எண் 4128/GL-II/2021 நாள் 27.02.2021
2.சென்னை-6, தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
ந.க.எண்: 003421/«1/2021, நாள்: 17.03.2021.
தமிழக சட்டசபைத் தேர்தல் 06.04.2021 அன்று நடைபெறுவதை முன்னிட்டு
மாநில முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளது. கள்ளக்குறிச்சி
வருவாய் மாவட்டத்தில் கல்வித்துறையில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் முதல்
அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் மத்திய அரசின்
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு
பணியாற்ற கடமைப்பட்டவர்கள்.
சமூக ஊடகங்கள் வாயிலாகவோ, சங்கங்கள் வாயிலாகவோ, அரசியல்
கட்சிகளை ஆதரித்தோ, எதிர்த்தோ வாக்கு சேகரிப்பு மற்றும் விமர்சனங்கள் உள்ளிட்ட
செயல்களில் அரசு ஊழியர்கள் ஈடுபடுவது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு
எதிரானதாகும்.
கல்வித்துறை சார்ந்த பணியாளர்கள் அனைவரும் தேர்தல் ஆணையம்
வெளியிட்டிருக்கின்ற நடத்தை விதிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன்
நடுநிலைமையாக பள்ளிகளில்/அலுவலகங்களில் பணியாற்ற வேண்டும் மற்றும் தேர்தல்
பணிகளில் ஈடுபட வேண்டும்.
கல்வித்துறை சார்ந்த பணியாளர்கள் எந்தவிதத்திலும் அரசியல் கட்சி சார்பாக
வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது, தபால் வாக்குகள் சேகரிப்பில் ஈடுபடுவது போன்றவை
ஆதாரத்துடன் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளின்
அடிப்படையில் கடும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment