CBSE 10th Exam: கடைசிநேர படிப்புக்கு உதவும் 10 டிப்ஸ்; 90% மதிப்பெண் குவிக்கும் வாய்ப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, March 7, 2021

CBSE 10th Exam: கடைசிநேர படிப்புக்கு உதவும் 10 டிப்ஸ்; 90% மதிப்பெண் குவிக்கும் வாய்ப்பு

CBSE 10th Exam: கடைசிநேர படிப்புக்கு உதவும் 10 டிப்ஸ்; 90% மதிப்பெண் குவிக்கும் வாய்ப்பு 

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள், மே 4ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரை நடக்கிறது. . தேர்வு முடிவுகள் ஜூலை 15ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 10ம் வகுப்பு வாரியத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கீழ்காணும் 10 முக்கிய கூற்றுகளை பின்பற்றினால் 90 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்களை பெற முடியும். 

 1. முனைப்பு காட்டுங்கள்:  Show initiative

மாணவர்கள் ஒவ்வொருவரும் மாறுபட்ட கற்றல் திறனை கொண்டுள்ளன. தேர்வுக்கு எப்போது தயாராக வேண்டும் என்ற முடிவு அவரவர் முடிவுக்கு உட்படுத்தப்பட்டது. இருப்பினும், கடைசி நேரத்தில் தேவையற்ற மன அழுத்தத்திற்கு உள்ளாகாமல் இருக்க, தேர்வுக்கு முன்கூட்டியே தயராகுவது நல்லது. சரியான திட்டமிடல் வெற்றியை உறுதி செய்யும். 

 2. தேர்வு முறை அறிதல்: Knowing the Exam method

அண்மையில் முடிவுற்ற தேர்வுகளின் வினா மற்றும் விடைகளை பார்வையிடுவது நல்லது. ஒவ்வொரு பாடத்திலும் எது முக்கியமானவை என்று தீர்மானிக்க இது உதவும். முக்கியமான அத்தியாயங்களுக்கு முன்னுரிமை அளிப்பது மிகவும் தேவையானது. 

 3. கால அட்டவணையை தயார் செய்து கொள்ளுங்கள்: Prepare a timetable

மாணவர்கள் தங்களது படிப்புக்கான கால அட்டவணையை தயார் செய்து கொண்டு படிக்கவேண்டும். “ஒரு மரத்தை வெட்டுவதற்கு ஆறு மணிநேரம் அவகாசம் கொடுத்தால், அதில் முதல் நான்கு மணி நேரத்தை கோடரியைக் கூர்மைப்படுத்துவேன்” என்பது ஆபிரகாம் லிங்கனின் வரியாகும். சரியான திட்டமிடல் இல்லாமல், எந்த இலக்கையும் அடைய முடியாது. கால அட்டவணையை உன்னிப்பாக பின்பற்றுதல் முக்கியமாகும். 

 4. சுய விருப்பம் முக்கியம்: Self-will is important

பள்ளி, பயிற்சி வகுப்புகளெல்லாம் தாண்டி, மாணவர்கள் முழு அர்பணிப்புடன் சுயமாக படிப்பைத் தொடர் வேண்டும். தனிமையில், சுய சோதனை செய்து கொள்வது நல்லது.

 5. குறிப்புகள் எடுத்துக் கொள்ளுகள்: Take notes

பாடங்களில் உள்ள சில முக்கிய சொற்களை அடிக்கோடிட்டு படிக்கவும். தேர்வு நெருங்கும் வேளையில், அடிக்கொடிட்ட பகுதிகளை மட்டும் திரும்பி பார்ப்பது சிறந்த நேர மேலாண்மையாக கருதப்படும். 

 6. பாடப்புத்தகத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்: Prioritize the textbook

வினா வங்கி புத்தகத்தில் உள்ள கேள்விகளை மட்டும் தயார் செய்யாமல், பரிந்துரைக்கப்பட்ட பாடப்புத்தகத்தில் கவனம் செலுத்துவது எளிதாக அமையும். தேர்வின் பொது எதையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலை பாடப்புத்தகம் வழங்கும். 

 7. மொழி பாடங்களைபுறக்கணிக்க கூடாது: Language subjects should not be neglected

பொதுவாக மாணவர்கள் இது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM ) ஆகிய பாடங்களில் அதிக கவனம் செலுத்துகின்றனர். இறுதி மதிப்பெண் கணக்கிடப்படுவதால், மொழிப் பாடங்களை புறக்கணிக்க கூடாது. 

 8. ஃபார்முலா பட்டியல்கள்: Formula lists

வாரியத் தேர்வுகளுக்கு கணிதம் அல்லது அறிவியல் படிப்புகளுக்கு தயாராகும் மாணவர்கள் ஃபார்முலா பட்டியல்களை உருவாக்க வேண்டும். . 

 9. இடைவெளிகளை எடுத்துக் கொள்ளுங்கள்: Take breaks

மாணவர்கள் நீண்ட நேரம் தொடர்ச்சியாக படிப்பதைத் தவிர்த்து, ஒவ்வொரு 50-60 நிமிடங்களுக்கும் சிறு இடைவெளியை எடுத்துக் கொள்ளுங்கள். இடைவெளி அடுத்தக்கட்ட படிப்புக்கு மிகுந்த உந்துதலாய் அமையும். 

 10. தேர்வை சரியான முறையில் அணுகுங்கள்Approach the exam in the right way

வாரியத் தேர்வுக்கு முழுமையாகத் தயாரான மாணவர்கள், தேர்வு அறையில் சரியான முறையில் நுட்பங்களையும் உத்திகளையும் பின்பற்றி விடையளிக்க வேண்டும்.

No comments:

Post a Comment