DGE 12ம் வகுப்பு தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணம் - ஆன்லைன் வழியாக செலுத்த இயலாத பள்ளிகள் - வங்கி வரைவோலையாக செலுத்தக் கோருதல் - Proceedings - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, March 2, 2021

DGE 12ம் வகுப்பு தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணம் - ஆன்லைன் வழியாக செலுத்த இயலாத பள்ளிகள் - வங்கி வரைவோலையாக செலுத்தக் கோருதல் - Proceedings

DGE பொதுத் தேர்வு +2 பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணம் - ஆன்லைன் வழியாக செலுத்த இயலாத பள்ளிகள் - வங்கி வரைவோலையாக செலுத்தக் கோருதல் - Proceedings


அனுப்புநர் 

முனைவர். சி. உஷாராணி, எம்.எஸ்ஸி., பி.எட்., பிஎச்.டி
அரசுத் தேர்வுகள் இயக்குநர், 
சென்னை - 600 006.

பெறுநர்

அனைத்து மாவட்ட அரசுத் தேர்வுகள் இயக்குநர்கள் 


ந.க.எண். 026441 /எச்1/2020 நாள் : 01.03.2021

 ஐயா அம்மையீர், 

பொருள் : 

2020-2021ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு +2 பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணம் - ஆன்லைன் வழியாக செலுத்த இயலாத பள்ளிகள் - வங்கி வரைவோலையாக செலுத்தக் கோருதல் சார்பு. 

பார்வை: இவ்வலுவலக இதே எண்ணிட்ட கடிதம், நாள்.13.02.2021. *** 

பார்வையில் காணும் கடிதத்தில், 2020-2021ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களிடமிருந்து (தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்களைத் தவிர்த்து) தேர்வுக்கட்டணத் தொகையினை பெற்று, 15.02.2021 முதல் 19.02.2021 வரையிலான நாட்களுக்குள், தேர்வுக்கட்டணத் தொகை மற்றும் அட்டவணைப் படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலுக்கான (TML) கட்டணத் தொகையினையும் ஆன்லைன் வழியாக செலுத்துமாறு, தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், தேர்வுக் கட்டணம் மற்றும் அட்டவணைப் படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலுக்கான (TML) கட்டணத்தினை ஆன்லைன் வாயிலாக செலுத்த இயலவில்லை என சில பள்ளித் தலைமையாசிரியர்கள் தெரிவித்துள்ளனர். அவ்வாறு ஆன்-லைன் வாயிலாக மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு எழுதுவதற்கான தேர்வுக் கட்டணம் மற்றும் அட்டவணைப் படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலுக்கான (TML) கட்டணத்தினை செலுத்த இயலாத பள்ளிகள் பட்டியலினை 02.03.2021 முதல் மாவட்ட உதவி இயக்குநர்கள் தங்கள் அலுவலகத்திற்கு கொடுக்கப்பட்ட User Name மற்றும் Password-ஐ பயன்படுத்தி ஆய்வு செய்ய வேண்டும்

 




No comments:

Post a Comment