DSE- ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி படிப்பு - (PGDET - Post Graduate Diploma in Educational Technology) - Director Proceedings - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, March 3, 2021

DSE- ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி படிப்பு - (PGDET - Post Graduate Diploma in Educational Technology) - Director Proceedings

DSE- ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி படிப்பு -  (PGDET - Post Graduate Diploma in Educational Technology) - Director Proceedings

தமிழ்நாடு பாளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், 
சென்னை-6 
நக.எண் 08445/பிடி2/82/2021. 
நாள்.0203.2021 

பொருள்: 

பார்வை பள்ளிக்கல்வி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி படிப்பு -சார்பு.

 1. அரக கடித எண் 1607/ERT/2020-1, நாள் 03.02.2021. 

2. இந்திரா காந்தி திறந்த நிலை பல்கலைக் கழக மண்டல இயக்குநரின் எண்.F.No.1G/RCC/Admission/2020, 

நாள்:19.01.2021. 

கடித பார்வை 1-ல் காணும் அரசு கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்திரா காந்தி திறந்த வெளி பல்கலைக்கழக மண்டல இயக்குநரின் கடிதத்தில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக புதிதாக (PGDET-Post Graduate Diploma in Educational Technology) என்ற பட்டப் படிப்பு தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். 


இதில் ஆசிரியர்கள் சேர்வதற்கான பயிற்சிக் கட்டணத்திற்கு நிதியுதவி செய்து ஆசிரியர்கள் சேர்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொdள கோரியுள்ளார், இப்பட்டயப் படிப்பில் ஆசிரியர்கள் பயிற்சி பெறுதல் சார்ந்து ரூ.6600/- பயிற்சிக் கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும் இது ஓராண்டு முதல் மூன்றாண்டு முடிய உள்ள பயிற்சிக் காலம் எனவும், ஜனவரி மற்றும் ஜீலை மாதங்களில் இதற்கான சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேற்காண் பொருள் சார்பாக தகுதியுள்ள ஆசிரியர்கள் இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்திற்கு செலுத்தப்படும் பயிற்சி கட்டணம் ஆசிரியர்களே செலுத்தி பயிற்சி பெறலாம் எனவும், அவ்வாறு பயிற்சியில் சேரும் ஆசிரியர்கள் துறை அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவித்து உரிய நடகடிக்கைக்காக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவிக்கலாகிறது. 

இணைப்பு:

19.01.2011-ல் நாளிட்ட IGNOU மண்டல இயக்குநரின் கடித நகல் (தகவலுக்காக) பள்ளிக்கல்வி இயக்குநருக்காக

பெறுநர் 

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள். 





No comments:

Post a Comment