DSE - சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட விபரங்கள் தினசரி அறிக்கையாக வழங்கக் கோருதல் - முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்
மிக மிக அவசரம்!
தேர்தல் பணி
சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
ந.க.எண்.337/T5/2020
நாள்... 0203.2021
பொருள்:
பள்ளிக் கல்வி சேலம் மாவட்டம் தேர்தல் பணி மற்றும்
கொரோனா-19 நோய் தடுப்பு - சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு
மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில்
பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா
தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட விபரங்கள் தினசரி அறிக்கையாக
வழங்கக் கோருதல் – தொடர்பாக.
1. சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர்(வளர்ச்சி பிரிவு) அவர்களின்
கடிதம் ந.க.எண்.214653/2020/வ3, நாள்..04.02.2021
2. சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில்
01.03.2021 அன்று நடைபெற்ற கூட்டத்தில் வழங்கப்பட்ட
அறிவுரைகள்
பார்வை:
மேற்காண் பார்வைகளின்படி, 2021 சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள்
மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக பணிபுரியும் பொருட்டு அவசியம் கொரோனா
தடுப்பு ஊசியினை உடன் செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில்
கீழ்கண்ட எண்ணிக்கையில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தேர்தல் பணியில்
ஈடுபடவுள்ளனர்.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் இணைப்பு-1இல் கண்டுள்ள அரசு
மருத்துவமனைகளில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு
கொரோனா தடுப்பு செலுத்தப்பட்டு அதற்கான ஒப்புகை சம்பந்தப்பட்டவர்களின்
கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றது.
எனவே சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசியை செலுத்தி கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அதற்கான ஒப்புதலை சரிபார்த்த பின்னர் தடுப்பு ஊசியை செலுத்தி கொண்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் விவரங்களை இணைப்பு 2ல் கண்டுள்ளப் படிவத்தில் பூர்த்தி செய்து தினசரி பிற்பகல் 4 மணிக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்திடுமாறும் அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும்
பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்கள் கல்வி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள
ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசியினை செலுத்திக்
கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளித்
தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களிடமிருந்து கொரோனா தடுப்பு
தளசியினை செலுத்தி கொண்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் விபரங்களை
இணைப்பு-2இல் கண்டுள்ள படிவத்தில் தினசரி அறிக்கையாகப் பெற்று, அதனை தொகுத்து
தினசரி பிற்பகல் 04.30 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்திடுமாறு
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நலன் கருதி கொரோனா தடுப்பு ஊசியினை
தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவரும் செலுத்திக் கொள்ளுமாறும், இதில் எவ்வித
சுணக்கமுமின்றி துரிதமுடன் செயல்பாடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
(குறிப்பு - கொரோனா தடுப்பு ஊசி செலுத்துவதற்கு ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களது
அலுவலக அடையாள அட்டை மற்றும் Aadhar (or) PAN (or) Driving License (or) Voter ID
ஆகியவற்றை உடன் எடுத்து செல்லுமாறு தெரிவிக்கப்படுகிறது)
இணைப்பு-
1.
அரசு மருத்துவமனைகள் விபரம்
ஒம்/-து.கணேஷ்மூர்த்தி
2. படிவம்
முதன்மைக் கல்வி அலுவலர்,
சேலம்,
பெறுநர்...
அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்,
சேலம் மாவட்டம்.
-
அனைத்து வகை அரசு/ அரசு நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளித்
தலைமையாசிரியர்கள்,
சேலம் மாவட்டம்.
-
அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள்,
சேலம் மாவட்டம்.
நகல்...
- சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்
Download Timer
No comments:
Post a Comment