யெஸ்… ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு Fixed Deposit இந்த வங்கி தான் பெஸ்ட்!
எஃப்.டி வழங்கும் வங்கிகளில் பெரும்பாலோர் குறுகிய கால, இடைக்கால அல்லது நீண்ட கால எஃப்.டி- யைத் தேர்வு செய்வதற்கான விருப்பத்தை உங்களுக்கு வழங்குகிறார்கள்.
வங்கிகளில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களிடையே பிரபலமான ஒன்றாக உள்ளது.
எஃப்.டி வழங்கும் வங்கிகளில் பெரும்பாலோர் குறுகிய கால, இடைக்கால அல்லது நீண்ட கால எஃப்.டி- யைத் தேர்வு செய்வதற்கான விருப்பத்தை உங்களுக்கு வழங்குகிறார்கள். உங்களுடைய முதலீட்டை பொறுத்து நீங்கள் இவற்றில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் உங்களுக்கு பிடித்த விருப்பத்தை தேர்வு செய்யும் முன்னர், வங்கிகள் எந்த விருப்பத்திற்கு அதிக வட்டி தருகிறார்கள் என்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
எஸ்பிஐ வங்கியின் சமீபத்திய எஃப்.டி வட்டி விகிதங்கள் (2 கோடிக்குக் கீழ் – பொது மக்களுக்கு )
எஸ்பிஐ வங்கியில் ஒரு எஃப்.டி கணக்கிற்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை காலவரையறை செய்யப்பட்டுள்ளது. அவை உங்களுடைய முதலீட்டின் தேவை, குறுகிய காலமா அல்லது நீண்ட காலமா என்பதை பொறுத்து மாறுபடலாம். எஸ்பிஐ வங்கியின் எஃப்.டி வட்டி விகிதங்கள் பொது வாடிக்கையாளர்களுக்கு 2.9% முதல் 5.4% வரை வேறுபடுகின்றன. இவை இந்தாண்டு ஜனவரி 20 முதல் நடைமுறையில் உள்ளது.
யெஸ் வங்கியின் சமீபத்திய எஃப்.டி வட்டி விகிதங்கள் (2 கோடிக்குக் கீழ் – பொது மக்களுக்கு)
யெஸ் வங்கி பொது மக்களுக்கு, மூத்த குடிமக்களுக்கு பல நிலையான வைப்பு நிதி (எஃப்.டி) திட்டங்களை வழங்கி வருகிறது. பொது வாடிக்கையாளர்களுக்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை காலவரையறை செய்யப்பட்டுள்ள வைப்புகளில் 3.50% முதல் 6.75% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதோடு கடந்த பிப்ரவரி 8ம் தேதி முதல், அதன் கால வைப்புக்கான வட்டி விகிதத்தை திருத்தியுள்ளது.
கோடக் மஹிந்திரா வங்கியின் சமீபத்திய எஃப்.டி வட்டி விகிதங்கள் (2 கோடிக்குக் கீழ் – பொது மக்களுக்கு)
கோட்டக் மஹிந்திரா வங்கியின் எஃப்.டி வட்டி விகிதங்கள் வெவ்வேறு காலவரையறைகளுடன் உள்ளது. அவை 2.50% முதல் 5.25% வரை இருக்கும், இந்த விகிதங்கள் கடந்த பிப்ரவரி 20 முதல் அமலில் உள்ளது.
கனரா வங்கியின் சமீபத்திய எஃப்.டி வட்டி விகிதங்கள் (2 கோடிக்குக் கீழ் – பொது மக்களுக்கு)
7 நாட்கள் முதல் பத்து ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் எஃப்.டி.களுக்கு, கனரா வங்கி 2.95% முதல் 5.5% வரை வட்டி விகிதத்தை அளிக்கிறது. இது கடந்த பிப்ரவரி 8 தேதி முதல் ரூ.2 கோடிக்கும் குறைவான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது.
No comments:
Post a Comment