முக கவசம் (MASK) இன்றி வரும் பொது மக்களுக்கு அபராதம் விதி்த்தல் மற்றும் அறிவுரைகள் வழங்குதல் - உதவி திட்ட இயக்குநர் அவர்களின் குறிப்பாணை - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, March 18, 2021

முக கவசம் (MASK) இன்றி வரும் பொது மக்களுக்கு அபராதம் விதி்த்தல் மற்றும் அறிவுரைகள் வழங்குதல் - உதவி திட்ட இயக்குநர் அவர்களின் குறிப்பாணை

பொது இடங்களில் முக கவசம் (MASK) இன்றி வரும் பொது மக்களுக்கு அபராதம் விதி்த்தல் மற்றும் அறிவுரைகள் வழங்குதல் - உதவி திட்ட இயக்குநர் அவர்களின் குறிப்பாணை


பொருள்: 

கோவிட்-19 அபராதம் விதித்தல் - நாகப்பட்டினம் மாவட்டம் ஊரகப் பகுதிகளில் முகக்கவசம் இன்றி பொது இடங்களில் வரும் பொதுமக்களுக்கு அபராதம் விதித்தல் - அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக. 

பார்வை: 

மாவட்ட ஆட்சித்தலைவர், நாகப்பட்டினம் அவர்களின் அறிவுரை நாள்: 16.03.2021. தற்பொழுது அனைத்து இடங்களிலும் கொரோனா நோய் தொற்று மீண்டும் அதிகளவில் பரவி வருவதால், நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஊரகப் பகுதிகளில் மக்கள் வீட்டை விட்டு பொது இடங்களுக்கு வரும்பொழுது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். அவ்வாறு முகக்கவசம் அணியாமல் வருபவர்களிடம் ரூ.200/- அபராதம் விதித்திடவும், பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், சந்தைகள், கடைகள் போன்ற பகுதிகளில் முகக்கவசமின்றி வருபவர்களிடம் ரூ.500/- அபராதம் விதித்திடவும், குறைந்தது ஒரு நாளைக்கு 30 நபர்களுக்கு அபராதம் விதித்திடவும், பார்வையில் காணும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஊரக பகுதிகளில் முகக்கவசமின்றி வெளியில் வரும் பொதுமக்களிடம் அபராதம் விதித்திடவும், வசூல் செய்யப்படும் அபராதத்தொகையினை அதற்கு அடுத்த நாளே கீழ்க்கண்ட கருவூல தலைப்பில் செலுத்திடவும், தினமும் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்ட தொகை விபரத்தினை தினசரி அறிக்கையாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து மாலை 4.00 மணிக்குள் உதவி இயக்குநர்(ஊ) அலுவலகத்திற்கு அனுப்பி வைத்திடவும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ)-களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. 

0210: Medical and Public Health, 04: Public Health, 104: Fees and Fines etc, AD: Fines towards offences declared as compoundable under Tamil Nadu Public Health Act, 1939 - Non- adherence of COVID-19 measures, 229: Fines & Penalties, 01: Health & Family Welfare, IFHRMS: (DPC:0210-04-104-AD-22901), Old: (DPC:0210-04- 104-AD-2901) 

தினசரி அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால், இவற்றின்பால் தனிக்கவனம் செலுத்தி அறிக்கையினை காலதாமதமின்றி அனுப்பி வைத்திடவும், அனுப்பப்படும் புள்ளி விபரங்கள் மெய்தன்மையுடன் மிக துல்லியமாக அனுப்பிடவும் தெரிவிக்கப்படுகிறது. அபராதம் விதிக்காத நேர்வில் தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் உரிய விளக்கம் அளித்திட வேண்டும். 

மேலும், இதுதொடர்பாக தினந்தோறும் மாலை 6.00 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ/கி.ஊ)-களுக்கு வான்வழி (Wireless) மூலமாகவோ அல்லது காணொலி காட்சி (Video Conference) மூலமாகவோ ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்ற விபரமும் தெரிவிக்கப்படுகிறது. 


No comments:

Post a Comment