தேர்தல் பணி அனுமதிக்கு 'மொபைல் ஆப்' (Mobile App) வந்தாச்சு!
அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு விரைவாக அனுமதி வழங்க ஏதுவாக, 'என்கோர்' என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம், பிரசார கூட்டங்களுக்கு அனுமதி பெறுவது;
பிரசார வாகனத்துக்கு அனுமதி பெறுவது போன்ற பணிகளுக்கு, 'சுவிதா' என்ற செயலி வெளியிடப்பட்டது.கடந்த லோக்சபா தேர்தலின் போது, இந்த செயலி பயன்பாட்டுக்கு வந்தது. அதிலிருந்து குறைபாடுகளை நீக்கி, 'அப்டேட்' செய்யப்பட்ட 'என்கோர்' என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அரசியல் கட்சியினர், அனுமதி கேட்டு ஆன்லைனில் விண்ணப்பித்தாலும், தேர்தல் நடத்தும் அலுவலர், மற்ற அதிகாரிகளிடம் அனுப்பி, தனித்தனியாக பரிந்துரைகளை கேட்டுப்பெற வேண்டிய நிலை இருந்தது.
கூடுதல் கால விரயம் ஏற்பட்ட நிலையை மாற்றி, 'என்கோர்' என்ற 'அப்டேட்' செய்யப்பட்ட புதிய செயலி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.அரசியல் கட்சியினர் அல்லது வேட்பாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்தால், அந்த விண்ணப்பம், நியமனம் செய்யப்பட்டுள்ள அரசு அதிகாரிக்கு சென்றுவிடும்.
அவர்கள் உடனுக்குடன் பரிந்துரை செய்தால், அடுத்த, 24 மணி நேரத்திற்குள், தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கூறுகையில், 'அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர், பிரசார கூட்டம், பொதுக்கூட்டம், வாகன அனுமதி உட்பட பல தேவைகளுக்கு, இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரிகள், 'என்கோர்' செயலி வாயிலாக, 24 மணி நேரத்திற்குள் அனுமதி வழங்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது' என்றனர்.
இதற்கான, இணைய தள முகவரி: Please Wait
Download Timer
No comments:
Post a Comment