போன் பேச இனி பைசாவே செலவு செய்ய வேண்டாம் போல..! Telegram ல் இந்த வசதியை கவனித்தீர்களா? - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, March 9, 2021

போன் பேச இனி பைசாவே செலவு செய்ய வேண்டாம் போல..! Telegram ல் இந்த வசதியை கவனித்தீர்களா?

போன் பேச இனி பைசாவே செலவு செய்ய வேண்டாம் போல..! Telegram ல் இந்த வசதியை கவனித்தீர்களா? 


Telegram how to initiate voice calls போதுமான வலுவான வைஃபை இணைப்பு இருக்கிறது என்றால், டெலிகிராம் அழைப்புகள் பயன்படுத்துவது மிகவும் எளிது. ஏராளமான சுவாரசிய அம்சங்கள் நிறைந்த செய்தியிடல் பயன்பாடுகளில் ஒன்றான டெலிகிராம் திறன்களில் வீடியோ மற்றும் வாய்ஸ் அழைப்புகளும் அடங்கும். 

உங்களிடம் அதிவேக இணைப்புடன் டேட்டா திட்டம் இருந்தால் அல்லது நிலையான வைஃபை இணைப்புடன் இணைக்கப்பட்டிருந்தால், நீங்களும் இந்தப் பயன்பாட்டின் வீடியோ மற்றும் வாய்ஸ் அழைப்புகளைப் பயன்படுத்தலாம். 


டெலிகிராம் அழைப்புகள் உங்கள் முதன்மை அழைப்பு பயன்முறையாகப் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு நிலையானவை. மேலும், நீங்கள் மோசமான நெட்வொர்க் பெற்ற பகுதியில் வசிக்கிறீர்கள், ஆனால் போதுமான வலுவான வைஃபை இணைப்பு இருக்கிறது என்றால், டெலிகிராம் அழைப்புகள் பயன்படுத்துவது மிகவும் எளிது. டெலிகிராம் வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகளை எவ்வாறு செய்வது என்பது இங்கே பார்க்கலாம். 


 ஸ்டெப் 1: 

டெலிகிராம் திறந்து, நீங்கள் அழைக்க விரும்பும் தொடர்பின் அரட்டை சாளரத்திற்குச் செல்லவும். 

 ஸ்டெப் 2: 

மேல் வலதுபுறத்தில் மூன்று-புள்ளி உடைய மெனுவைத் திறக்கவும் வீடியோ மற்றும் வாய்ஸ் அழைப்பு உள்ளிட்ட சில விருப்பங்களை இங்கே காணலாம். 

ஸ்டெப் 3: 

டெலிகிராமில் வாய்ஸ் அழைப்பைத் தொடங்க வாய்ஸ் அழைப்பைக் கிளிக் செய்யலாம். அதேபோல், வீடியோ அழைப்பைத் தொடங்க வீடியோ அழைப்பை கிளிக் செய்யுங்கள். டெலிகிராம் க்ரூப் வாய்ஸ் சாட் ஒரு குழுவில் உள்ள அனைவரிடமும் ஒரே நேரத்தில் பேச விரும்பினால், இதுவரை அதற்கென்று க்ரூப் வாய்ஸ் அழைப்பு இல்லை. டெலிகிராம் அதற்கு பதிலாக வாய்ஸ் சாட் பயன்முறையை வழங்குகிறது. 

அங்கு உங்கள் குழு உறுப்பினர்கள் நேரடி வாய்ஸ் அரட்டையில் இருக்க முடியும். யாரும் எப்போது வேண்டுமானாலும் இந்த க்ரூப் சாட்டிலிருந்து வெளியேறி அவர்கள் விரும்பும் போது மீண்டும் சேரமுடியும். டெலிகிராமில் க்ரூப் வாய்ஸ் சாட்டை எவ்வாறு தொடங்குவது என்பது இங்கே 

ஸ்டெப் 1: 

நீங்கள் வாய்ஸ் சாட் தொடங்க விரும்பும் குழுவைத் திறக்கவும் 

ஸ்டெப் 2: 

குழு விவரங்கள் பக்கத்தைத் திறக்க குழு பெயரைக் கிளிக் செய்க. 

 ஸ்டெப் 3: 

மேல் வலதுபுறத்தில் உள்ள மூன்று-புள்ளி மெனுவைக் கிளிக் செய்து வாய்ஸ் சாட் என்பதை தேர்வு செய்யுங்கள்.

No comments:

Post a Comment