12-ஆம் வகுப்புத் தேர்வு தள்ளிவைக்கப்படுமா? பள்ளிக் கல்வித் துறை பதில்
சுகாதாரத்துறை அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் 12-ம் வகுப்பு தேர்வை நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார் ஆலோசனை நடத்தினார்.
தேர்தல் முடிந்த பின் ஒரு வாரம் கழித்து மீண்டும் ஆலோசனை நடத்த இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அடுத்த வாரம் நடைபெறும் கூட்டத்தில், சுகாதாரத்துறை அளிக்கும் அறிக்கை அடிப்படையில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் 9 முதல் 11-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எனினும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் மே 3-ஆம் தேதி பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது கரோனா தொற்று அதிகரித்து வருவதால், பொதுத் தேர்வு தள்ளிவைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment