வேளாண் அலுவலர்கள் 135 பேருக்கு உதவி இயக்குனர் பதவி உயர்வு வழங்கியதால் 1200 வேளாண் அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது. இதை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் வேளாண் அலுவலகங்களில் பணியாற்றும் வேளாண் அலுவலர்கள் 135 பேர் சமீபத்தில் உதவி இயக்குனர்களாக பதவி உயர்த்தப்பட்டனர். மேலும் 300 பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. இதனால் தற்போது மாநிலத்தில் 1200 வேளாண் அலுவலர்கள் பணியிடம் காலியாக உள்ளது.
இதுபற்றி உதவி இயக்குனர்களாக பதவி உயர்வு பெற்றவர்கள் கூறுகையில், 'பதவி உயர்வு வழங்கியதால் வேளாண் அலுவலர் பணியிடங்களின் காலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வேளாண் அலுவலர் பணியிடம் தேர்வாணையம் மூலம் நேரடியாக நியமனம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.
No comments:
Post a Comment