தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
சென்னை -6
ந.க.எண்.56610/01/இ4/2017.நாள். 16.04.2021.
பொருள் :
இடைநிலைக்கல்வி அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் உபரி
பணியிடங்கள் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கு
W.A. (MD) Nos. 76. 225 etc batch cases -ன் மீது 31.03.2021-ன்
தீர்ப்பாணை பெறப்பட்டது - தொடர் நடவடிக்கை மேற்கொள்ள
தெரிவித்தல் தொடர்பாக.
பார்வை:
1) தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச்சட்டம் 1973
மற்றும் விதிகள் 1974.
2) அரசாணை நிலை எண். 525 பள்ளிக்கல்வித்துறை, நாள்.
29.12.1997.
3) குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி
உரிமைச்சட்டம் -2009,
4) சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை மேல்முறையீட்டு
வழக்கு W.A. (MD) Nos. 76. 225 ctc batches., ன் மீது
31.03.2021ன் தீர்ப்பாணை.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச்சட்டம் 1973 விதிகள் 1974 ன்படி
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை /
மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தால் நியமன ஒப்புதல்
கோரி சென்னை உயர் நிதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது.
இவ்வழக்குகளின் தீர்ப்பாணையின் மீது துறையால் மேல் முறையீடு செய்யப்பட்டு சென்னை
உயர்நீதி மன்ற மதுரை கிளை மேல்முறையீட்டு வழக்கு W.A. (MD) Nos. 76.225 etc batches.,
ன் மீது 31.03.2021ன் தீர்ப்பாணை பெறப்பட்டது.
இந்நிலையில் பார்வை-4 ல் கண்டுள்ள 31.03.2021 நாளிட்ட நீதிமன்ற தீர்ப்பாணையில்
ஆசிரியர்களுக்கு பணிநிரவல் மேற்கொள்ளுவது சார்ந்து வழிகாட்டுதல்
வழங்கப்பட்டுள்ளது. அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் தொடர் நடவடிக்கை
மேற்கொள்ளும் பொருட்டு நீதிமன்ற தீர்ப்பாணை நகல் இத்துடன் இணைத்து
அனுப்பப்படுகிறது.
இணைப்பு,
W.A. (MD) Nos. 76. 225 etc
பள்ளிக்கல்வி இயக்கம்
நா
batches 31.03.2021 ன் நீதிமன்ற தீர்ப்பாணை
பெறுதல்.
அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள்,
நகல்.
மாவட்டக்கல்வி அலுவலர்கள்
No comments:
Post a Comment